இந்தியா

ஏர்செல் - மேக்சிஸ் முறைகேடு: கார்த்தி சிதம்பரத்திற்கு சொந்தமான ரூ. 1.16 கோடி சொத்துக்கள் முடக்கம்! 

DIN

புதுதில்லி: ஏர்செல் - மேக்சிஸ் முறைகேடு வழக்கில்  கார்த்தி சிதம்பரத்திற்கு சொந்தமான ரூ. 1.16 கோடி சொத்துக்களை  முடக்கி அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது

கடந்த 2006-ஆம் ஆண்டில் மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் இருந்தபோது மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனமானது, ஏர்செல் நிறுவனத்தில் ரூ.3,500 கோடி முதலீடு செய்தது. இந்த முதலீடு, பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுவின் அனுமதி பெறாமல் மேற்கொள்ளப்பட்டதாகவும், இதற்கு கார்த்தி சிதம்பரத்துக்கு சொந்தமான நிறுவனம் உதவியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.

அதன் அடிப்படையில் சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடைச் சட்டத்தின்கீழ் அமலாக்கத் துறையும் தனியாக வழக்குப் பதிவு விசாரணை மேற்கொண்டு வருகிறது.   

இந்நிலையில் இந்த வழக்கில்  கார்த்தி சிதம்பரத்திற்கு சொந்தமான ரூ. 1.16 கோடி சொத்துக்களை  முடக்கி அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது

சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடைச் சட்டத்தின் கீழ், கார்த்தி சிதம்பரத்திற்கு சொந்தமான 'அட்வான்டேஜ் ஸ்ட்ராட்டஜிக் கன்சல்டிங்' என்ற நிறுவனத்தின் ரூ.1.16 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாக    அமலாக்கத் துறை தற்பொழுது அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெப்ப நோய்களுக்கு சிகிச்சையளிக்க அரசு மருத்துவமனையில் சிறப்பு வாா்டு

கோட் நாயகி மீனாட்சி செளத்ரி - புகைப்படங்கள்

மேட்டூர் கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்று: 5 ஆயிரம் வாழைகள் சேதம்

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

SCROLL FOR NEXT