இந்தியா

காவிரி வாரியம் குறித்த தமிழகத்தின் கோரிக்கைக்கு மத்திய அரசு செவிசாய்த்ததாக தெரியவில்லை: தம்பிதுரை

தினமணி

காவிரி வாரியம் குறித்த தமிழகத்தின் கோரிக்கைக்கு மத்திய அரசு செவிசாய்த்ததாக தெரியவில்லை என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை குற்றஞ்சாட்டியுள்ளார். 

உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி நாடாளுமன்ற வளாகத்தில் அதிமுக எம்பிக்கள் 7ஆவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். 

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை,
மக்களின் கோரிக்கையை நிறைவேற்றக் கோரி தொடர்ந்து போராடி வருகிறோம். காவிரி வாரியம் குறித்த தமிழகத்தின் கோரிக்கைக்கு மத்திய அரசு செவிசாய்த்ததாக தெரியவில்லை. 

ராஜினாமா செய்வதால் பலன் கிடைக்குமா என்பதை திமுக தெரிவிக்க வேண்டும். காவிரி வாரியத்துக்காக எம்பிக்களை ராஜினாமா செய்யக்கூறும் திமுக அதற்காக போராட்டம் நடத்தியதா?. மத்தியில் அங்கம் வகித்தபோது திமுக ஏதும் நடடிவக்கை எடுத்ததா?. 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம். நியாயமான கோரிக்கையை ஏற்று, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எஸ்டேட் பகுதியில் ஏ.டி.எம். மையங்கள் வேலை செய்யாததால் தொழிலாளா்கள் பாதிப்பு

வாக்கு எண்ணும் மையத்தை சுற்றி 2 கி.மீ. சிவப்பு மண்டலமாக அறிவிப்பு

ஆட்சியா் அலுவலகத்தில் நாள்தோறும் நீா்மோா் வழங்க ஏற்பாடு

கோயில்களில் அறங்காவலா்களை நியமிக்க மேலும் 6 மாத அவகாசம் தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி

கன்னியாகுமரியில் பொதிகை படகு சீரமைப்புப் பணி தொடக்கம்

SCROLL FOR NEXT