இந்தியா

மோடியின் டிவிட்டர் ஃபாலோயர்களில் 60 சதவீதம் முகவரி போலி: டிவப்லோமசி

ENS

புது தில்லி: டிவிட்டர் பக்கத்தில் அதிகமான ஃபாலோயர்களைக் கொண்ட அரசியல் தலைவர்களில் முக்கியமானவராக விளங்கும் பிரதமர் மோடியின் ஃபாலோயர்களில் 60% முகவரி போலியானவை என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச அமைப்புகள் மற்றும் பல உலக நாடுகளின் டிஜிட்டல் கொள்கையை மேம்படுத்த உதவும் டிஜிட்டல் தளமான டிவிப்லோமசி வெளியிட்டிருக்கும் தகவலில் இந்த உண்மை தெரிய வந்துள்ளது.

மோடியின் டிவிட்டர் பக்கத்தை பின்தொடரும் நபர்களில் 60% முகவரிகள் போலியானவை என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதாவது மோடியை பின்தொடரும் 40,993,053 பேரில் 24,799,527 பேர் மட்டுமே உண்மையான நபர்கள். இதில் 16,191,426 பேர் போலியான முகவரிகள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிவிட்டர் ஆடிட் அல்கோரிதம் உதவியுடன், ஒவ்வொரு டிவிட்டர் கணக்கிலும் இருக்கும் நண்பர்களின் பட்டியல், கடைசியாக டிவீட் செய்த தேதி, டிவீட் செய்யும் எண்ணிக்கை போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு டிவிட்டர் பக்கத்தின் உண்மைத் தன்மை கண்டறியப்படுகிறது.

இந்தியப் பிரதமர் மோடி மட்டுமல்ல, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், போப் பிரான்சிஸ், கிங் சல்மான் போன்ற பல உலகத் தலைவர்களின் டிவிட்டர் பக்கத்திலும் பல லட்சக்கணக்கான போலி ஐடிகள் பின்தொடர்வதும் தெரிய வந்துள்ளது.

இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் டிவிட்டர் பக்கத்தை பின்தொடர்வோரில் 3,696,460 பேர் போலியானவர்கள் என்பதும், 1,715,634 பேர் உண்மையானவர்கள் என்பதுதான்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவை தேர்தல்: மூத்த அரசியல் தலைவர்கள் வீட்டிலிருந்தபடியே வாக்குப்பதிவு

திமிரும் தன்னடக்கமும்...!

வார இறுதி நாட்கள் - மெட்ரோ அறிவித்த சூப்பர் ஆஃபர்

மருத்துவ கடைநிலை ஊழியர்களுக்கு 3 விதமான பணிநேரங்கள்: மக்கள் நல்வாழ்வுத் துறை

நாட்டு நடப்பு!

SCROLL FOR NEXT