இந்தியா

சுகேஷ் சந்திரசேகரின் நீதிமன்றக் காவல் மேலும் நீட்டிப்பு

DIN

இரட்டை இலைச் சின்ன விவகாரத்தில் சுகேஷ் சந்திரசேகரின் நீதிமன்றக் காவல் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. 

இரட்டை இலைச் சின்னத்தைப் பெறுவதற்காக தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக இடைத்தரகர் எனக் கூறப்படும் பெங்களூருவைச் சேர்ந்த சுகேஷ் சந்திரசேகர் கடந்த ஆண்டு ஏப்ரல் 16-ஆம் தேதி கைது செய்யப்பட்டார். அவர், தற்போது திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 

இந்த வழக்கு தில்லி மாவட்ட தீஸ் ஹசாரி நீதிமன்றத்தில் முன்னிலையில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் ஜாமீன் கோரி பல முறை சுகேஷ் சந்திரசேகர் மனு தாக்கல் செய்தார். அதை  தீஸ் ஹஜாரி நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, அவரது நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டு வருகிறது. 

இவ்வழக்கு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது சுகேஷ் சந்திரசேகரின் நீதிமன்றக் காவலை ஏப்ரல் 4ஆம் தேதி வரை நீடித்த நீதிமன்றம் வழக்கு விசாரணையும் ஒத்திவைத்து உத்தரவிட்டது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆஸ்திரியாவில் பிரியா பவானி சங்கர்!

துணைக் கேப்டன் பதவிக்கு ஹார்திக் பாண்டியா தகுதியானவரா? முன்னாள் வீரர் பதில்!

மாதனூரில் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை

ஸ்ரீதேவியின் புதல்வி!

தைவானில் 4.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!

SCROLL FOR NEXT