இந்தியா

டார்ச் வெளிச்சத்தில் பெண்ணுக்கு அறுவை கிசிச்சை: பீதியடைய வைத்த பிகார் மருத்துவமனை! 

பிகார் மாநில மருத்துவமனை ஒன்றில் டார்ச் வெளிச்சத்தில் பெண் ஒருவருக்கு கையில் அறுவை கிசிச்சை நடந்துள்ள விவகாரம், அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.   

DIN

பாட்னா: பிகார் மாநில மருத்துவமனை ஒன்றில் டார்ச் வெளிச்சத்தில் பெண் ஒருவருக்கு கையில் அறுவை கிசிச்சை நடந்துள்ள விவகாரம், அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.   

பீகார் மாநிலம் சகார்சா மாவட்டத்தில் உள்ளது சதார். கையில் காயமடைந்த அப்பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் இங்குள்ள மருத்துவமனையில் ஞாயிறு இரவு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அவருக்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டி இருந்தது.

ஆனால் அப்பொழுது மருத்துவமனையில் மின்சாரம் இல்லை. எனவே டார்ச் வெளிச்சத்தில் அவருக்கு அறுவை சிகிச்சை அளிப்பது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.அதன்படி சிகிச்சையும் நடந்துள்ளது. அப்பொழுது எடுக்கப்பட்ட விடியோ ஒன்று இணையத்தில் தற்பொழுது வைரலாகப் பகிரப்பட்டு வருகிறது.

அந்த விடியோவில் மயக்க நிலையில் படுத்திருக்கும் பெண்ணின் கையில் அடிப்பட்டுள்ளது. அவருக்கு மற்றொரு பெண் டார்ச் பிடித்திருக்க, அந்த வெளிச்சத்தில் காக்கி உடை அணிந்த ஒரு நபர் அந்தப் பெண்ணுக்கு சிகிச்சை அளிக்கும் காட்சிகள் அந்த வீடியோவில் உள்ளது.

ஆனால் இந்த சம்பவம் தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் எவ்வித விளக்கமும் அளிக்கவில்லை.இத்தகைய சம்பவங்கள் தற்பொழுதெல்லாம் தொடர்கதையாகி விட்டன.  இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஹோட்டல் வருவாய் ரூ.50; ஆனால், ஊழியர்களுக்கு சம்பளம் ரூ.15 லட்சம்! கங்கனா ஆதங்கம்!

முதல்வராக்கிய சசிகலாவை சந்திக்க தைரியம் இருக்கிறதா? - பழனிசாமிக்கு தினகரன் சவால்!

அரசனாக மோகன் லால்! விருஷபா படத்தின் டீசர்!

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்!

கடைசி டி20: ஜிம்பாப்வேவை வீழ்த்தி நமீபியா ஆறுதல் வெற்றி!

SCROLL FOR NEXT