இந்தியா

திரிபுரா சட்டப்பேரவையில் முதல் முறையாக ஒலிக்கப்பட்ட தேசிய கீதம்

DIN


அகர்தலா: திரிபுரா சட்டப்பேரவையில் முதல் முறையாக வெள்ளிக்கிழமை தேசிய கீதம் ஒலிக்கப்பட்டது.

திரிபுராவில் புதிதாக ஆட்சி அமைத்துள்ள பாஜக-ஐபிஎஃப்டி உறுப்பினர்களுடன், சட்டப்பேரவை நேற்று கூடியது. அப்போது தாற்காலிக அவைத் தலைவர் சக்ரவர்த்தி, சபாநாயகர் தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிட்டார். 

முன்னதாக பேரவையில் தேகிய கீதம் வாசிக்கப்பட்டது. அப்போது அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், அதிகாரிகள், பத்திரிகையாளர்கள், பார்வையாளர்கள் என அனைவரும் எழுந்து நின்று தேசியகீதத்துக்கு மரியாதை செய்தனர்.

தினந்தோறும் திரிபுரா சட்டப்பேரவையில் தேசிய கீதம் இசைக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது. நாட்டில் வேறு எந்த சட்டப்பேரவையிலாவது தேசிய கீதம் பாடப்படுகிறதா என்பது பற்றி எனக்குத் தெரியாது என்று சட்டப்பேரவைச் செயலர் பாம்தேவ் மஜும்தார் கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் பெயர் அறிவிப்பு!

கேரளம்: விடுதி கட்டடத்தில் இருந்து குதித்து என்ஐடி மாணவர் தற்கொலை

அனைத்து மாவட்டங்களும் 90%-க்கு மேல் தேர்ச்சி!

தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் எப்போது கிடைக்கும்?

புதுச்சேரி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது!

SCROLL FOR NEXT