இந்தியா

'போக்சோ' வழக்குகளை விரைந்து முடிக்க தனி நீதிமன்றங்கள்: உயர் நீதிமன்றங்களுக்கு உச்சநீதி மன்றம் அறிவுரை 

சிறார் மீதான பாலியல் குற்றங்களுக்கு எதிரான 'போக்சோ' வழக்குகளை விரைந்து முடிக்க ஏதுவாக தனி நீதிமன்றங்கள் அமைக்க நடவடிக்கைகளை எடுக்குமாறு, மாநில உயர் நீதிமன்றங்களுக்கு உச்சநீதி மன்றம் அறிவுரை.. 

கவியழகன்

புதுதில்லி: சிறார் மீதான பாலியல் குற்றங்களுக்கு எதிரான 'போக்சோ' வழக்குகளை விரைந்து முடிக்க ஏதுவாக தனி நீதிமன்றங்கள் அமைக்க நடவடிக்கைகளை எடுக்குமாறு, மாநில உயர் நீதிமன்றங்களுக்கு உச்சநீதி மன்றம் அறிவுரை அளித்துள்ளது.

சிறார் மீதான பாலியல் குற்றங்களுக்கு எதிரான 'போக்சோ' பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்ட 1.12 லட்சம் வழக்குகள்  நாடு முழுவதும் நிலுவையில் இருக்கிறது. தமிழகத்தில் மட்டும் 2,003 போக்சோ வழக்குகல் நிலுவையில் இருக்கிறது.

12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்பவர்களுக்கு மரண தண்டனை விதிக்க வகை செய்யும் அவசர சட்டத்துக்கு சமீபத்தில் மத்திய அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதன்படி, இந்த அவசர சட்ட திருத்த மசோதா ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பின்னர் இந்த சட்டத்திற்கு கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதிஎன்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தும் ஒப்புதல் அளித்தார்.

இந்நிலையில் சிறுமிகள் மீதான பாலியல் குற்றங்கள் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் செவ்வாயன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சிறார் மீதான பாலியல் குற்றங்களுக்கு எதிரான 'போக்சோ' வழக்குகளை விரைந்து முடிக்க ஏதுவாக தனி நீதிமன்றங்கள் அமைக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இந்த விவகாரம் தொடர்பாக  சம்பந்தப்பட்ட மாநில அரசைக் கலந்தாலோசித்து அதற்கான முயற்சிகளை உடனே தொடங்க வேண்டும் என்று மாநில உயர் நீதிமன்றங்களுக்கு உச்சநீதி மன்றம் அறிவுரை அளித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அஞ்சு வண்ணப் பூவே... அனன்யா!

அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது!

வெள்ளி நகைகளை வைத்து இனி கடன் பெறலாம்! முழு விவரம்

குழந்தைகளுக்கு விருது இல்லையா? பிரகாஷ் ராஜிடம் 12 வயது குழந்தை நட்சத்திரம் காட்டம்!

இன்றும் விலை குறைந்த தங்கம் விலை!

SCROLL FOR NEXT