இந்தியா

மாட்டுக்கறி சாப்பிடுபவர்களுக்கு இந்தியாவில் இருக்க உரிமை இல்லை: பெண் துறவியின் பேச்சும் எதிர்வினையும் 

மாட்டுக்கறி சாப்பிடுபவர்களுக்கு இந்தியாவில் இருக்க உரிமை இல்லை என்று கேரளாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பெண் துறவி ஒருவர், வித்தியாசமான எதிர்வினை களை எதிர்கொண்டு வருகிறார் .

கவியழகன்

திருவனந்தபுரம்: மாட்டுக்கறி சாப்பிடுபவர்களுக்கு இந்தியாவில் இருக்க உரிமை இல்லை என்று கேரளாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பெண் துறவி ஒருவர், வித்தியாசமான எதிர்வினை களை எதிர்கொண்டு வருகிறார் .

மத்தியப் பிரதேச மாநிலம் சிந்த்வாரா என்ற பகுதியைச் சேர்ந்தவர் சரஸ்வதி. வி.ஹெச்.பி அமைப்பினைச் சேர்ந்த துறவியான இவர், சனாதன தர்ம பிரச்சார சேவா சமிதி என்ற அமைப்பின் தலைவராகவும் இருக்கிறார். அதன் சார்பில் கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டம் பாடியட்கா பகுதியில் நடந்த இந்துத்துவா அமைப்பு நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டார்.

அப்பொழுது அவர் பேசும் பொழுது, 'உலகம் முழுவதும் பசு எல்லோராலும் மதிக்கப்படுகிறது. ஆனால் கேரளவில் மட்டும் பசுக்கள் கொல்லப்படுகின்றன. மாட்டிறைச்சி விருந்துகள் நடத்தப்படுகின்றன. எனவே இத்தகைய கொலையாளிகளுக்கு இந்தியாவில் வாழ உரிமை இல்லை' என்று பேசினார்.

அவரது இந்த பேச்சு அவருக்குக் கடும் எதிர்ப்பை சம்பாதித்துக் கொடுத்துள்ளது தற்பொழுது கேரளா மக்கள் எல்லோரும் அவருக்கு மாட்டுக்கறி உணவுகளை சமைத்து புகைப்படம் எடுத்து அனுப்பி வருகிறார்கள். அத்துடன் அவரது பேஸ்புக் பக்கத்தில் வரிசையாக மாட்டுக்கறி உணவுகளை சமைக்கும் முறைகள் மற்றும் அது தொடர்பான புகைப்படங்களை அனுப்பி சாப்பிடுங்கள் என்று கூறி கிண்டல் செய்து வருகிறார்கள். இந்த தாக்குதலை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் சரஸ்வதி திணறி வருகிறார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மணப்பாறையில் பெரியாா் பிறந்தநாள் கொண்டாட்டம்

தவெக நிா்வாகிக்கு கொலை மிரட்டல்: 4 போ் கைது

மணப்பாறை, வையம்பட்டியில் பிரதமா் மோடி பிறந்தநாள் விழா

சென்னை விமான நிலையத்தில் ரூ.18 கோடி போதைப் பொருள் பறிமுதல்

ரூ. 7 கோடி மோசடி: தனியாா் நிறுவன இயக்குநா் கைது

SCROLL FOR NEXT