இந்தியா

3-ஆவது அணி: தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், அகிலேஷ் யாதவ் இன்று சந்திப்பு

உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வரும், சமாஜவாதி கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவ், தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் ஆகியோர்ஹைதராபாத்தில் புதன்கிழமை சந்திக்கின்றனர்

Raghavendran

தேசிய அளவில் 3-ஆவது அணி அமைப்பது தொடர்பாக தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சித் தலைவரும், தெலங்கானா முதல்வருமான சந்திரசேகர ராவ், கடந்த ஒரு மாதமாக தீவிர முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். இதுதொடர்பாக கடந்த மார்ச் மாதம் முதலாவதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை சந்தித்தார். 

பின்னர், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களுடன் இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இதனிடையே ஏப்ரல் 29-ஆம் தேதி திமுக தலைவர் கருணாநிதி மற்றும் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி ஆகியோரை சந்தித்துப் பேசினார்.

இந்நிலையில், உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வரும், சமாஜவாதி கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவ், தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் ஆகியோர் ஹைதராபாத்தில் புதன்கிழமை சந்திக்கின்றனர். அப்போது 2019 மக்களவைத் தேர்தலில் 3-ஆவது அணி அமைப்பது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர்.

முன்னதாக, 2019 மக்களவைத் தேர்தலின் போது தேசிய அளவில் 3-ஆவது அணி அமைப்பதற்கான அவசியம் ஏற்பட்டுள்ளதாக சந்திரசேகர ராவ் தெரிவித்தார். மேலும் இந்த 3-ஆவது அணியானது அரசியல் கட்சிகளின் கூட்டாக இல்லாமல் மக்களின் கூட்டாக இருக்க விரும்புவதாக கூறினார். அதுமட்டுமல்லாமல் 2019 தேர்தலின் போது விவாசயிகளின் நலனுக்கான திட்டத்தை ஏற்படுத்துவதே தனது நோக்கம் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரசை விமர்சித்தால் 7 ஆண்டு சிறை? -மகாராஷ்டிர முதல்வர் விளக்கம்

குழந்தை இல்லாதவர்களுக்கு கடைசி வாய்ப்பா IVF சிகிச்சை முறை? | மருத்துவர் ஆலோசனைகள்!

தஞ்சாவூர் அருகே மின்சாரம் பாய்ந்து கணவன்-மனைவி பலி

மேரிலிண் மன்ரோ லுக்... ஓவியா!

சலம்பல பாடல் புரோமோ!

SCROLL FOR NEXT