ஆளுநர் மாளிகையில் இருந்த 5 சந்தன மரங்கள் கடத்தல்
மஹாராஷ்டிர மாநில ஆளுநர் மாளிகையில் இருந்து 5 சந்தன மரங்கள் வெட்டிக் கடத்தப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மஹாராஷ்டிர மாநில ஆளுநராக வித்யாசாகர் ராவ் உள்ளார். அவருக்கான ஆளுநர் மாளிகை (ராஜ் பவன்) புணேவில் அமைந்துள்ளது. இந்நிலையில், ஆளுநர் மாளிகையில் இருந்து 5 சந்தன மரங்கள் வெட்டிக் கடத்தப்பட்டுள்ளன.
ஏப்ரல் 30-ஆம் தேதி இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. இதையடுத்து அப்பகுதியில் அமைந்துள்ள சதுஷ்ருங்கி காவல்நிலையத்தில் மே 1-ஆம் தேதி புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆளுநர் மாளிகையில் ஆளுநர் மட்டுமல்லாமல் குடியரசுத் தலைவர், பிரதமர், நாடாளுமன்ற அவைத் தலைவர் உள்ளிட்ட உயர் பதவிகளில் இருப்பவர்களும் புணே வரும்போது தங்குவதற்கு அனுமதிக்கப்படுகிறது.
Advertisement
இந்நிலையில், மஹாராஷ்டிர ஆளுநர் மாளிகை அமைந்துள்ள இடத்துக்கு மிக அருகில் தான் அப்பகுதி காவல்நிலையம் செயல்பட்டு வருகிறது. கடந்த 2 வருடங்களில் ஆளுநர் மாளிகையில் இருந்து சந்தன மரங்கள் கடத்தப்படுவது இது 2-ஆவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.