இந்தியா

முன்னாள் முதல்வர்களுக்கு அரசு பங்களா: உ.பி. அரசின் சட்டத்தை ரத்து செய்த உச்ச நீதிமன்றம்

முன்னாள் முதல்வர்களுக்கு அரசு பங்களாவை ஒதுக்கீடு செய்ய வகை செய்யும் உத்தரப்பிரதேச அரசின் சட்டத்தை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

PTI


புது தில்லி: முன்னாள் முதல்வர்களுக்கு அரசு பங்களாவை ஒதுக்கீடு செய்ய வகை செய்யும் உத்தரப்பிரதேச அரசின் சட்டத்தை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அரசு பங்களாக்களை நிரந்தரமாக அனுபவிக்க முன்னாள் முதல்வர்களுக்கு உரிமை இல்லை என்றும், முன்னாள் முதல்வர்கள் நிரந்தரமாக அரசு பங்களாவில் தங்கியிருக்க வகை செய்யும்படி உத்தரப்பிரதேச அரசு கொண்டு வந்த சட்டத்தையும் உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

சட்டத்தின் கீழ் அனைவரும் சமம் என்பதை மறுக்கும் வகையில் கொண்டு வரப்பட்ட இந்த சட்டத்தை ரத்து செய்வதாக வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி ரஞ்சன் கோகோய் கூறியுள்ளார்.

மேலும் இந்த சட்டம், தன்னிச்சையான, சமூக பாகுபாட்டை உண்டாக்கும், அனைவரும் சமம் என்ற கொள்கையை மீறும் வகையில் இருப்பதாகவும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒருவர் அரசுப் பணியில் இருந்து வெளியேறிவிட்டால், அவர் அரசுக்கு சாதாரண மனிதன்தான். அப்படித்தான் அவரை அரசு பார்க்க வேண்டும்.

உத்தரப்பிரதேசத்தில் முன்னாள் முதல்வர்கள் அரசு பங்களாக்களை தொடர்ந்து பயன்படுத்தும் வகையில் அகிலேஷ் அரசு கொண்டு வந்த உத்தரப்பிரதேச அமைச்சர்களின் (ஊதியம், மாதப்படி, இதர வசதிகள்) சட்டம் 1981ல் திருத்தம் கொண்டு வந்தது.

இதனை எதிர்த்து பொது நல அமைப்பான லோக் பிரஹாரி தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் இன்று இந்த உத்தரவை அளித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”கர்வமில்லாத மனிதர் நல்லகண்ணு!” நடிகர் எம்.எஸ். பாஸ்கர் மரியாதை!

கோடிங் டெவலப்பர்கள் பற்றி ஸ்ரீதர் வேம்பு கருத்து!

தஞ்சாவூர் மாவட்டத்துக்கு மார்ச் 2ல் உள்ளூர் விடுமுறை!

ஃபியூச்சர்ஸ் வர்த்தகத்தில் வெள்ளி கிலோவுக்கு ரூ. 3,264 ஆக சரிவு!

கா்நாடக சுகாதாரத் துறையில் மருந்து பற்றாக்குறை: பாஜக விஜயேந்திரா கண்டனம்

SCROLL FOR NEXT