இந்தியா

ஹெப்பல் தொகுதி வாக்குச்சாவடிக்கு மறு வாக்குப்பதிவு அறிவிப்பு

ஹெப்பல் தொகுதியில் அமைந்துள்ள 2-ஆவது எண் கொண்ட வாக்குச்சாவடியில் மறுவாக்குப் பதிவு நடத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.

Raghavendran

222 தொகுதிகளுக்கான கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தல் மே 12-ஆம் தேதி (இன்று) நடைபெறுகிறது. 2 தொகுதிகளுக்கான தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மே 15-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. இங்கு மாலை 5 மணி நிலவரப்படி 61.25 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. 

இந்நிலையில், ஹெப்பல் தொகுதியில் அமைந்துள்ள 2-ஆவது எண் கொண்ட வாக்குச்சாவடியில் மறுவாக்குப் பதிவு நடத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. அங்கு இடம்பெற்றிருந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் திடீரென பழுதானதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

காலை முதல் நடைபெற்று வந்த வாக்குப்பதிவின் போது வாக்குப்பதிவு இயந்திரங்கள் திடீரென செயலிழந்தன. பின்னர் அதனை சரிசெய்யும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதனால் வாக்குப்பதிவு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

இருப்பினும் இந்த முயற்சிகள் பலனளிக்காத காரணத்தால் மே 14-ஆம் தேதி மறுவாக்குப்பதிவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கர்நாடக தலைமை தேர்தல் அதிகாரி சஞ்சீவ் குமார் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அஞ்சு வண்ணப் பூவே... அனன்யா!

அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது!

வெள்ளி நகைகளை வைத்து இனி கடன் பெறலாம்! முழு விவரம்

குழந்தைகளுக்கு விருது இல்லையா? பிரகாஷ் ராஜிடம் 12 வயது குழந்தை நட்சத்திரம் காட்டம்!

இன்றும் விலை குறைந்த தங்கம் விலை!

SCROLL FOR NEXT