இந்தியா

சுனந்தா புஷ்கர் மர்ம மரண வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல்: சசி தரூர் குற்றவாளியாக சேர்ப்பு 

PTI

புதுதில்லி: சுனந்தா புஷ்கர் மர்ம மரணம் தொடர்பான வழக்கில் தில்லி காவல்துறை தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில்,  அவரது கணவரான சசி தரூர் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.

காங்கிரஸ் மூத்த தலைவரும், எம்.பி.யுமான சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் கடந்த 2014-ஆம் ஆண்டு ஜனவரி17-ஆம் தேதி தில்லியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் மர்மான முறையில் உயிரிழந்தார். அவர் விஷம் குடித்து தற்கொலை செய்திருக்கலாம் என்றும், கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் பல்வேறு சந்தேகங்கள் நிலவி வந்தன. இதுதொடர்பாக தில்லி காவல்துறை தொடர்ந்து விசாரணை செய்து வந்தது..

இந்நிலையில் திங்களன்று தில்லி காவல்துறை தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில்,  அவரது கணவரான சசி தரூர் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.

தில்லி மெட்ரோபாலிட்டன் நீதிபதி தர்மேந்தர் சிங் முன்னிலையில் தாக்கல் செயய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிக்கையில், இந்திய குற்றவியல் தண்டனை சட்டப் பிரிவுகள் 498A (பெண்ணை அவரது கணவரோ அல்லது உறவினர்களோ கொடுமை செய்தல்) மற்றும் 306 (தற்கொலைக்குத் தூண்டுதல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் சுனந்தா புஷ்கரின் கணவரான சசி தரூர் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.    

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் இன்று கனமழை எச்சரிக்கை!

புதிய கரோனா வைரஸ்? ஆபத்தா, ஃபிலிர்ட்!

இந்த வாரம் யாருக்கு யோகம்!

‘மின்னும் நட்சத்திரம்’ சம்யுக்தா...!

நவாப் ராணியின் ஆன்மா...!

SCROLL FOR NEXT