ஓய்வூதியம் பெறுவதற்கு ஆதார் கட்டாயமில்லை - மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்
புதுதில்லி: மத்திய அரசு ஊழியர்கள் ஓய்வூதியத்தை பெறுவதற்கு ஆதார் அட்டை கட்டாயமில்லை என்று மத்திய பணியாளர் நலன் துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர்கள் துறையின் 30வது கூட்டம் தில்லியில் இன்று (செவ்வாய்கிழமை) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மத்திய தொழிலாளர் நலன் துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் ஓய்வூதியம் பெறுவதற்கு ஆதார் கட்டாயம் இல்லை என்று தெரிவித்தார்.
"ஆதார் என்பது, உயிர்வாழ் சான்றிதழை வங்கிக்கு செல்லாமலே சமர்ப்பிப்பதற்கான ஒரு கூடுதல் தொழில்நுட்ப வசதி. ஆகவே, அரசு ஊழியர்கள் தங்களது ஓய்வூதியத்தை பெறுவதற்கு ஆதார் கட்டாயமில்லை" என்று அவர் மேலும் தெரிவித்தார்.
ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியர்கள் தங்களது வங்கிக் கணக்கோடு ஆதாரை இணைக்காததால் ஓய்வூதியம் பெறுவதற்கு சிரமப்படுவதாக தகவல்கள் வந்து கொண்டிருந்தன. இந்த நிலையில், மத்திய இணை அமைச்சர் இத்தகைய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.