இந்தியா

கர்நாடக மாநில முதல்வராக எடியூரப்பா நாளை காலை பதவியேற்பு? 

DIN

பெங்களூரு: கர்நாடக மாநில முதல்வராக எடியூரப்பா நாளை காலை 09.30 மணிக்கு பதவியேற்க உள்ளதாக அம்மாநில பாஜகவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தகவல் வெளியாகியுள்ளது. 

கர்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் ஆளுநர் யாரை ஆட்சி அமைக்க அழைக்கப் போகிறார் என்பது பெரும் கேள்விக்குறியாக இருந்தது.

இந்நிலையில் கர்நாடக மாநில முதல்வராக எடியூரப்பா நாளை காலை 09.30 மணிக்கு பதவியேற்க உள்ளதாக அம்மாநில பாஜகவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தகவல் வெளியாகியுள்ளது. 

இதுதொடர்பாக கர்நாடக மாநில பாஜகவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள தகவல் பின்வருமாறு:

கர்நாடக மாநில மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்த தருணம் வந்து விட்டது. எடியூரப்பாவை மாநில ஆளுநர் வஜூபாய் வாலா ஆட்சியமைக்க அழைத்துள்ளார். அவர் நாளை நாளை காலை 09.30 மணிக்கு கர்நாடக மாநில முதல்வராக பதவியேற்க உள்ளார்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை மாநில ஆளுநர் அலுவலகத்திலிருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அணிவகுத்து நின்ற வாகனங்கள்...

வருங்கால வைப்பு நிதி குறை தீா்க்கும் முகாம்

மும்பை விமான நிலையத்தில் 21 கிலோ தங்கம் பறிமுதல்!

ஹெலிகாப்டர் விபத்திலிருந்து உயிர்தப்பிய அமித் ஷா? என்ன நடந்தது?

தமிழகத்தில் ரூ.1,309 கோடி பறிமுதல்!: தேர்தல் ஆணையம்

SCROLL FOR NEXT