இந்தியா

இலங்கை அதிபருடன் விபின் ராவத் சந்திப்பு

DIN

இலங்கை அதிபர் மைத்ரிபால சிறீசேனாவை இந்திய ராணுவ தலைமைத் தளபதி விபின் ராவத் வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினார்.
இலங்கை ராணுவ தலைமைத் தளபதி மகேஷ் சேனநாயகே விடுத்த அழைப்பின் பேரில், விபின் ராவத் கடந்த திங்கள்கிழமை இலங்கை சென்றார். இந்நிலையில், அதிபர் சிறீசேனாவை மரியாதை நிமித்தமாக வெள்ளிக்கிழமை சந்தித்து அவர் கலந்துரையாடினார்.
இதுகுறித்து அந்நாட்டு அதிபர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், 'இருநாடுகளுக்கு இடையேயான நட்புறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து இருவரும் விவாதித்தனர்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை விபின் ராவத் சமீபத்தில் சந்தித்தார்.
இரு நாடுகளின் ராணுவ உறவை அடுத்தகட்டத்துக்கு கொண்டு செல்லும்விதமாக விபின் ராவத்தின் பயணம் இருக்கும் என்று இந்திய ராணுவம் தெரிவித்திருந்தது.
இலங்கையின் தென் கடல் பகுதியில் உள்ள அம்பாந்தோட்டை துறைமுகத்தை மேம்படுத்துவதற்காக சீனாவுடன் அந்நாட்டு அரசு 99 ஆண்டு கால ஒப்பந்தம் செய்துகொண்டது. அதன்படி, அந்த துறைமுகத்தை கட்டுப்படுத்தும் பொறுப்பை சீனாவுக்கு கடந்த வாரம் இலங்கை ஒப்படைத்தது.
அந்நாட்டின் இந்த நடவடிக்கை இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்று கருதப்பட்டது.
எனினும், இந்தியாவின் பாதுகாப்புக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் சீனா தனது ராணுவ நடவடிக்கைகளுக்காக அம்பாந்தோட்டை துறைமுகத்தைப் பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கப்பட மாட்டாது என்று இலங்கை விளக்கம் அளித்திருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

யாரோ இவர் யாரோ? அந்த ஓவியாவேதான்...

பிங்க் ரோஸ்...ஸ்ரீதேவி

சிசோடியா ஜாமீன் மனு: சிபிஐ, அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவு!

‘ஆவேஷம்’ பட டிரெண்டிங்கில் இணைந்த பாட் கம்மின்ஸ்!

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் 6 இல் வெளியாகும்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

SCROLL FOR NEXT