இந்தியா

அமைதித் தீர்வை பாகிஸ்தான் விரும்பினால் இந்தியா பரிசீலிக்கும்: நிர்மலா சீதாராமன்

DIN

பிரச்னைகளுக்கு அமைதியான முறையில் தீர்வுகாண பாகிஸ்தான் விரும்பினால் அதனை இந்தியா பரிசீலிக்கும் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
பாகிஸ்தான் தினத்தை முன்னிட்டு கடந்த மாதம் இஸ்லாமாபாதில் நடைபெற்ற ராணுவ அணிவகுப்பை காண வருமாறு இந்திய ராணுவத்தின் ஆலோசகர் - பிரிகேடியர் சஞ்சய் விஷ்வாஸ்ராவுக்கும், அவரது குழுவினருக்கும் பாகிஸ்தான் ராணுவப் பணியாளர் துறை தலைவர் - ஜெனரல் குமர் ஜாவேத் பாஜ்வா அழைப்பு விடுத்திருந்தார். இதுபோன்று அழைப்பு விடுக்கப்பட்டது வரலாற்றிலேயே முதல் முறையாகும்.
இரு நாடுகளுக்கு இடையே சிக்கல் மிகுந்த உறவு நீடித்து வருவதாகக் கருதப்படும் நிலையில், பாகிஸ்தான் ராணுவம் அமைதியை 
ஏற்படுத்தவும், பேச்சுவார்த்தை நடத்தவும் விரும்புவதாக ஜெனரல் பாஜ்வா, அண்மையில் கூறியிருந்தார்.
இதற்கிடையே, இந்தியாவும், பாகிஸ்தானும் ரஷியாவில் சீனாவுடன் இணைந்து ராணுவப் பயிற்சியில் ஈடுபட திட்டமிடப்பட்டுள்ளன.
இந்நிலையில், தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்ற செயற்கை நுண்ணறிவு தொடர்பான மாநாட்டில் நிர்மலா சீதாராமன் பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
ஜம்மு-காஷ்மீரில் ரமலான் மாதத்தில் தாக்குதலில் ஈடுபடுவதில்லை என்பதை ராணுவம் வெற்றிகரமாகக் கடைப்பிடித்து வருகிறது. 
காஷ்மீரில் தாக்குதல் இல்லை என்று ராணுவம் முடிவெடுத்த நிலையில், பாகிஸ்தான் தரப்பு எல்லைக்கு அப்பால் இருந்து தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. இதற்கு இந்தியத் தரப்பு உடனுக்குடன் பதிலடி கொடுத்து வருகிறது.
அதே நேரத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் அளித்துள்ள வாக்குறுதிப்படி, ஜம்மு-காஷ்மீரில் ரமலான் மாதத்தில் எவ்வித தாக்குதல் நடவடிக்கையிலும் ராணுவம் ஈடுபடவில்லை. 
அமைதித் தீர்வு தொடர்பாக பாகிஸ்தான் கூறி வரும் கருத்துகளை இந்தியா உன்னிப்பாக கவனித்து வருகிறது. அமைதித் தீர்வுக்கு பாகிஸ்தான் முன்வந்தால், அதனை இந்தியா பரிசீலிக்கும் என்றார்.
முன்னதாக, மாநாட்டில் நிர்மலா சீதாராமன் பேசியதாவது:
தரைப்படை, கடற்படை, விமானப் படை என ராணுவத்தின் அனைத்து நிலைகளிலும் செயற்கை நுண்ணறிவின் தேவை அதிகம் உள்ளது. ராணுவத்தில் மட்டுமல்லாது வேதியியல், உயிரியல் ஆய்வுகள், அணு ஆயுதப் பரிசோதனை என அனைத்து நிலைகளிலும் செயற்கை நுண்ணறிவு முக்கியத்துவம் பெற்று வருகிறது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாரதிதாசன் பிறந்த தின பேச்சரங்கம்

கோயில் திருவிழாக்களால் களைகட்டிய மேலப்பாளையம் சந்தை

குறிஞ்சிப்பாட்டின் 99 பூக்களை ஓவியமாக்கிய மாணவி!

அமைச்சா்கள், ஓபிஎஸ்-ஸுக்கு எதிரான மறு ஆய்வு வழக்கு ஒத்திவைப்பு

திருச்செந்தூா் சந்நிதி தெருவில் கழிவு நீா்: பக்தா்கள் அவதி

SCROLL FOR NEXT