இந்தியா

மாயாவதி பயன்படுத்திய அரசு இல்லத்தை கன்ஷி ராம் நினைவிடமாக அறிவித்தது பிஎஸ்பி

DIN

உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வர் மாயாவதி பயன்படுத்திய அரசு பங்களாவை, மறைந்த பகுஜன் சமாஜ் தலைவர் கன்ஷி ராமின் நினைவிடமாக பகுஜன் சமாஜ் கட்சி திடீரென அறிவித்துள்ளது.
உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வர்கள் என்.டி. திவாரி, மாயாவதி, முலாயம் சிங், ராஜ்நாத் சிங், அகிலேஷ் யாதவ், கல்யாண் சிங் ஆகிய 6 பேர் அரசு பங்களாக்களில் வசித்து வருகின்றனர். 
இந்த பங்களாக்களை காலி செய்யும்படி, 6 பேருக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, அவர்கள் 6 பேருக்கும் அரசு பங்களாக்களை காலி செய்யும்படி உத்தரப் பிரதேச அரசு (எஸ்டேட் துறை) நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இதனிடையே, மாயாவதி பயன்படுத்தி வந்த அரசு பங்களாவை கன்ஷி ராம் நினைவிடமாக பகுஜன் சமாஜ் கட்சி திடீரென அறிவித்துள்ளது. 
அந்த பங்களாவில் கன்ஷி ராம் பெயருடன் பெயர் பலகையையும் அக்கட்சி வைத்துள்ளது. 
இதுகுறித்து அக்கட்சி விளக்கமளிக்கையில், "கன்ஷி ராமுடன் பலவகைகளில் அந்த பங்களாவுக்கு தொடர்பு உண்டு. கன்ஷி ராம் பெயரில்தான் அந்த பங்களா ஒதுக்கப்பட்டது. இதனால், அதை கன்ஷி ராம் நினைவிடமாக அறிவித்து விட்டோம்' என்றது.
இதேபோல், சமாஜவாதி தலைவரும், முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ், உத்தரப் பிரதேச அரசுக்கு (எஸ்டேட் துறைக்கு) எழுதியுள்ள கடிதத்தில், அரசு பங்களாவை மேலும் 2 ஆண்டுகள் பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
பகுஜன் சமாஜ் கட்சி தெரிவித்திருப்பது குறித்து உத்தரப் பிரதேச அரசின் (எஸ்டேட் துறை) மூத்த அதிகாரிகளிடம் செய்தியாளர்கள் கருத்து கேட்டனர். 
அதற்கு அவர்கள், "முன்னாள் முதல்வர் என்ற முறையிலேயே அரசு பங்களா, மாயாவதிக்கு ஒதுக்கப்பட்டது. 
அங்கு தற்போது கன்ஷி ராம் பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அரசு ஆவணத்தை பார்த்து முடிவெடுப்போம்' என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு வங்கத்தில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் பாஜகவுக்கு உதவுகின்றன: மம்தா

’மன் கி பாத்’க்கு இந்த தேர்தலுடன் முடிவுரை -அகிலேஷ் யாதவ்

”தாலி அணியாத பிரியங்கா காந்தி..” -ம.பி. முதல்வர் விமர்சனம்

நிதி ஒதுக்கீட்டில் தமிழகத்துக்கு மத்திய அரசு துரோகம்: வைகோ குற்றச்சாட்டு

குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்

SCROLL FOR NEXT