இந்தியா

ஜம்மு-காஷ்மீரில் ஆளுநர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும்: ஃபரூக் அப்துல்லா

DIN

ஜம்மு-காஷ்மீரில் ஆளுநர் ஆட்சியை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லா வலியுறுத்தியுள்ளார்.
ஸ்ரீநகரில் செவ்வாய்க்கிழமை பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் அவர் மேலும் கூறியதாவது: காஷ்மீரில் சட்டப் பேரவைத் தலைவராக இருந்த நிர்மல் சிங், துணை முதல்வராக கவிந்தர் குப்தா ஆகியோர் ஜம்முவில் ராணுவ ஆயுதத் கிடங்குக்கு அருகே தங்கள் நிறுவனத்தின் பேரில் 12 ஏக்கர் நிலத்தை வாங்கியுள்ளனர். கடந்த 2014-ஆம் ஆண்டு வாங்கப்பட்ட இந்த நில பேரத்தில் முறைகேடு இருப்பதாக ராணுவம் தரப்பிலேயே குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
மேலும், அந்த இடத்தில் சட்ட விரோதமாக கட்டடங்களையும் பாஜக தலைவர்கள் கட்டியுள்ளனர். இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கும் தொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த விவகாரத்தில் மாநில அரசு தொடர்ந்து மெளனம் காத்து வருகிறது.
நாங்கள் பொதுவாக எந்த மாநிலத்திலும் ஆளுநர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று கூறுவது இல்லை. ஆனால், ஜம்மு-காஷ்மீரில் முறைகேடுகள் அதிகரித்துள்ளது மட்டுமின்றி, வன்முறையும் தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்த சூழ்நிலையில் ஆளுநர் ஆட்சியைத் தவிர வேறு வழியில்லை. எனவே, மாநிலத்தில் உடனடியாக ஆளுநர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். அப்போதுதான் மக்கள் நிம்மதியடைவார்கள். ஏனெனில், கடந்த 2016 ஜனவரி முதல் ஏப்ரல் வரை மாநிலத்தில் ஆளுநர் ஆட்சி இருந்தது. அப்போது மக்கள் எந்தப் பிரச்னையும் இன்றி அமைதியாக இருந்தனர் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தோ்வு: புதுச்சேரியில் 4, 817 போ் எழுதினா்

பெண்ணிடம் 5 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு

கஞ்சா, போதை மாத்திரைகள் விற்பனை: 4 போ் கைது

நீட் தோ்வு: விழுப்புரம் மாவட்டத்தில் 4,855 போ் எழுதினா்

வீட்டினுள் இளைப்பாறிய புள்ளி மான்!

SCROLL FOR NEXT