இந்தியா

பிரமோஸ் ஏவுகணை 2ஆவது நாளாக சோதனை

DIN

பிரமோஸ் சூப்பர்சானிக் ஏவுகணை தொடர்ந்து 2ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் வெற்றிகரமாக சோதனை நடத்தப்பட்டது.
ஒடிஸா மாநிலம், பாலசோர் மாவட்டத்தில் இந்த ஏவுகணை சோதனை செவ்வாய்க்கிழமை காலை 11.45 மணிக்கு நடைபெற்றது. மொபைல் லாஞ்சர் கருவியில் இருந்து செலுத்தப்பட்ட பிரமோஸ் ஏவுகணை, தனது இலக்கை மிகத் துல்லியமாக தாக்கி அழித்தது.
பிரமோஸ் ஏவுகணையானது, இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ), ரஷியாவின் என்பிஒஎம் அமைப்பு ஆகியவற்றால் கூட்டாக உருவாக்கப்பட்டது. அது ஒளியைக் காட்டிலும் 3 மடங்கு அதிக வேகமாக பாய்ந்து சென்று இலக்கைத் தாக்கி அழிக்கும் திறன் கொண்டது ஆகும். உலகில் தற்போது பயன்பாட்டில் இருக்கும் ஏவுகணைகளில் மிக வேகமாக சென்று தாக்குதல் நடத்தும் திறனுடைய ஏவுகணைகளில் இதுவும் ஒன்றாகும்.
முன்னதாக, ஒடிஸாவின் பாலசோர் மாவட்டத்தில் பிரமோஸ் ஏவுகணை திங்கள்கிழமையும் சோதித்து பார்க்கப்பட்டது. அதையடுத்து 2ஆவது முறையாக செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தப்பட்டுள்ளது. 2 முறையும் பிரமோஸ் ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை நடத்திய விஞ்ஞானிகளுக்கு டிஆர்டிஒ தலைவர் கிறிஸ்டோபர் தனது வாழ்த்துகளை தெரிவித்து கொண்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அழகான ராட்சசியே..!

கேரி கிறிஸ்டன் பாகிஸ்தான் கிரிக்கெட்டில் மாற்றத்தை ஏற்படுத்துவார்: பாபர் அசாம்

சின்னதுரையின் உயர் கல்விக்கு துணை நிற்பேன்: அன்பில் மகேஸ்

‘காங்கிரஸின் கனவு தகர்க்கப்படும்’: அனுராக் தாக்குர்

ஜீ மீடியா தலைமைச் செயல் அலுவலர் திடீர் ராஜிநாமா!

SCROLL FOR NEXT