இந்தியா

கர்நாடக சட்டப்பேரவை சபாநாயகர்: காங்கிரஸ், பாஜக மீண்டும் மோதல்

கர்நாடக சட்டப்பேரவை சபாநாயகர் பதவிக்கு பாஜக சார்பில் சுரேஷ் குமாரும், காங்கிரஸ் சார்பில் கேஆர் ரமேஷ் குமாரும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

DIN

கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் முடிவடைந்த நிலையில் பல இழுபறிக்கு பிறகு குமாரசாமி நேற்று (புதன்கிழமை) முதல்வராக பதவியேற்றார். இதையடுத்து, கர்நாடக சட்டப்பேரவை சபாநாயகருக்கான தேர்தல் நாளை (வெள்ளிக்கிழமை) சட்டப்பேரவையில் நடைபெறுகிறது.

இதற்கு பாஜக சார்பாக சட்டப்பேரவை உறுப்பினர் சுரேஷ் குமார் வேட்புமனு தாக்கல் செய்தார். 

இவரைத்தொடர்ந்து, காங்கிரஸ் சார்பில் சட்டப்பேரவை உறுப்பினர், கேஆர் ரமேஷ் குமார் வேட்புமனு தாக்கல் செய்தார். இவர், ஏற்கனவே 1994-99 ஆண்டு சபாநாயகராக இருந்துள்ளார். 

இவர்கள், இதற்கான வேட்புமனு தாக்கலை சட்டப்பேரவை செயல் மூர்த்தியிடம் வழங்கினர். 

இந்த தேர்தலுக்குப் பிறகு குமாரசாமி சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடம் நோக்கி ஆகஸ்ட் 7-ல் அமைதிப் பேரணி!

சொல்லப் போனால்... பஹல்காமிலிருந்து லெவல் கிராசிங் வரை...

தமிழகத்துக்கு மின்-பேருந்துகள்: டாடா மோட்டாா்ஸ் ஒப்பந்தம்

அரையாண்டில் 5% சரிந்த வீடுகள் விற்பனை

மனகஷ்டம் நீங்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT