இந்தியா

இந்த ஊர்களில் அடித்து கொளுத்தும் வெயிலுக்கு சென்னையே பரவாயில்லை எனத் தோன்றுகிறது!

சினேகா

சென்னையில் கடந்த சில தினங்களாக கடும் வெயில் கொளுத்தி மக்களை வாட்டி வதைத்து வருகிறது. ஆனால் சென்னையே பரவாயில்லை என்று நினைக்கும்படி இந்தியாவின் பிற பகுதிகளில் வெயில் நிலவரம் கலவரப்படுத்தும் வகையில் உள்ளது.

அதிலும் குறிப்பாக தில்லி, ராஜஸ்தான், உத்திரபிரதேசம் போன்ற ஊர்களில் கடுமையான வெப்பம் நிலவி வருகிறது. இங்கு சில பகுதிகளில் இன்று (மே 24) 45 டிகிரி செல்ஷியஸ் வெயிலுடன் புழுதிப் புயலும் அடிக்கும் என்று இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் (The India Meteorological Department (IMD) நேற்று தெரிவித்திருந்தது.

உத்தரப் பிரதேசத்தில் 40 டிகிரிக்கும் மேலாக வெயில் மற்றும் அனல் காற்று போன்றவற்றின் பாதிப்பால் மக்கள் அவதியுற்று வருகிறார்கள். 'எங்களை சுட்டெரித்துவிடும் அளவுக்கு சூரியனும் வெப்பக் காற்றும் வாட்டி எடுக்கிறது. ஏற்கனவே 46 டிகிரி வெப்பநிலை இங்கு உள்ளது, ஆனால் இதைவிட வெப்பமாக உணர்கிறோம்’ என உள்ளூர் மக்களில் ஒருவர் கூறினார்.

கான்பூர் மற்றும் வாரணாசியில் உள்ள மக்கள் வெப்பம் தாங்க முடியாமல் தவித்து வருகின்றனர். இந்த கொடூரமான வெப்பத்தை சமாளிக்க, வாரணாசி குடிமக்கள் 'குல்ஹத் லஸ்ஸி' (மோர்) தயிரை தினமும் அதிகளவு சாப்பிடுகிறார்கள். போலவே, கான்பூரில் வசிக்கும் மக்கள் உடலில் நீர்ச்சத்து இழப்பைத் தவிர்க்க எலுமிச்சை பானங்கள் மற்றும் பழச் சாறுகளை அருந்தி வருகிறார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பங்குச் சந்தையில் ரூ.800 கோடி சரிவைக் கண்ட ரேகா ஜுன்ஜுன்வாலா: தவறானது எங்கே?

முதல்முறை வாக்களித்த மகிழ்ச்சியில்...

மழைச் சாரலிலும் வாக்களிக்க நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்!

கேரளத்தில் 5 பேருக்கு வெஸ்ட் நைல் காய்ச்சல்!

பூவே.. செம்பூவே..!

SCROLL FOR NEXT