இந்தியா

நிபா வைரஸ்: கேரள நர்ஸ்களுக்கு நேர்ந்த 'எதிர்பாரா சங்கடம்'

ENS

பெரம்பரா: நிபா வைரஸ் பாதிப்பால் அவதிப்பட்டு வரும் கேரளாவில், நோயாளிகளுக்கு சிகிச்சையளித்து வரும் நர்ஸ்களுக்கு தற்பொழுது வேறொரு பிரச்னை உண்டாக்கியுள்ளது. 

கேரளாவில் தற்பொழுது பரவி வரும் நிபா வைரசானது இதுவரை 12 பேரை பலி கொண்டுள்ளது. பலியானவர்களில் பெரம்பரா தாலுகா அரசு மருத்துவமனை நர்ஸ்களில் ஒருவரான லினியும் அடங்குவார். பாதிப்புக்கு உள்ளான நோயாளி ஒருவருக்கு சிகிச்சை அளித்த பொழுது வைரஸ் தாக்குதலுக்கு உள்ளான லினி மரணமடைந்தார். அவரது இழப்பிலிருந்தே சக நர்ஸ்கள் தற்பொழுதுதான் தேறி வருகின்றனர்.

இந்நிலையில் பெரம்பரா தாலுகா அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு சிகிச்சையளித்து வரும் நர்ஸ்களுக்கு தற்பொழுது வேறொரு பிரச்னை உண்டாக்கியுள்ளது.   

இது தொடர்பாக லீனா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற நர்ஸ் எக்ஸ்பிரஸ் செய்தியாளரிடம் கூறியதாவது:

இந்த சம்பவம் கடந்த செவ்வாயன்று நடந்தது. நான் எனது பணி முடிந்து வீட்டுக்கு செல்வதற்காக தனியார் பேருந்து ஒன்றில் ஏறினேன். அந்த பேருந்தானது உளியேரி என்ற இடத்திற்கு வந்த பொழுது, வயதான பெண் ஒருவர் பேருந்தில் ஏறி, நான் அமர்த்திருந்த இருக்கையில் எனக்கு அருகில் உட்கார முயன்றார். அப்பொழுது அந்தப் பேருந்தின் நடத்துநர், லீனா பெரம்பரா மருத்துவமனை நர்ஸ் என்பதால், அவர் அருகே உட்காருவது ஆபத்து என்று அந்தப் பெண்ணிடம் எச்சரித்தார். இதனால் நான் மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளானேன்.

இவ்வாறு தெரிவித்துள்ள லீனா தற்பொழுது மருத்துவமனைக்கு வராமல் இருக்கிறார். அவரை வர வைக்கும் முயற்சியில் மற்றவர்கள் ஈடுபட்டுளள்னர்.

அதேபோல் மற்றொரு மூத்த நர்ஸ் ஒருவர் ஆட்டோ ஒன்றில் வரும் பொழுது மற்ற பயணிகளிடம் இருந்து விலகி அமருமாறு, ஆட்டோ ஓட்டுனரால் அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்.

இப்படி சமூகத்தால் ஒதுக்கப்படுவதால் மிகுந்த மன வருத்தத்தில் உள்ள நர்ஸ்கள் ஒன்று சேர்ந்து மாவட்ட மருத்துவ அலுவலர் ஜெயஸ்ரீயிடம் புகார் அளித்துள்ளனர். இந்த விவகாரத்தினை தீவிரமாக கவனிப்பதாக உறுதி அளித்துள்ள அவர், தேவைப்பட்டால் பெரம்பரா தாலுகா அரசு மருத்துவமனை நர்ஸ்களுக்கு போக்குவரத்து வசதி ஏற்பாடு செய்து தரப்படுமென்றும் உறுதியளித்துளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுற்றுச்சூழல் மேம்பாட்டில் முன்மாதிரி ஊராட்சி

தலையில் முண்டாசு, கருப்புநிற கோட்டு...

மனித நேயம்...

சிவப்பு அவல்

நாளை 4-ம் கட்ட வாக்குப்பதிவு!

SCROLL FOR NEXT