இந்தியா

கோயிலில் இஸ்லாமிய வாலிபரை அடிக்கத் திரண்ட இந்து அமைப்பினர்: கட்டியணைத்து காப்பாற்றிய சீக்கிய காவலர் (விடியோ) 

DIN

நைனிடால்: உத்தரகண்ட் மாநில கோயில் ஒன்றில் இஸ்லாமிய வாலிபரை அடிக்கத் திரண்ட இந்து அமைப்பினரிடம் இருந்து, அவரை சீக்கிய காவலர் ஒருவர் கட்டிப்பிடித்துக் காப்பாற்றிய சம்பவம், நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த சம்பவம் கடந்த 22-ஆம் தேதி நிகழ்ந்துள்ளது. உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள நைனிடால் பகுதியில் கோயில் ஒன்று அமைந்துள்ளது. இங்கு இஸ்லாமிய இளைஞர் ஒருவர் வந்துள்ளார். கோயில் வளாகத்தில் தனது தோழியை சந்தித்து அவரோடு பேசிக் கொண்டிருந்திக்கிறார்.

கோயிலுக்குள் வெகு நேரமாக அவர்கள் இருவரும் சிரித்து பேசியபடி இருக்க, தகவலை அறிந்து இவர்களை நோக்கி ஒரு குறிப்பிட்ட இந்து அடிப்படைவாத அமைப்பினர் வந்திருக்கின்றனர். அவர்களைக் கண்டதும் அந்த பெண் மெதுவாக அங்கிருந்து நகர்ந்து விட்டார்.

இதனையடுத்து அந்த இளைஞரை சூழ்ந்து கொண்டு அவரை சரமாரியாக வசைபாடத் துவங்கிய அமைப்பினர் ஒரு கட்டத்திற்கு பின் அவரை அடிக்க ஆரம்பித்திருக்கின்றனர். அப்போது தகவல் அறிந்து சப் இன்ஸ்பெக்டர் சுகன்தீப் சிங் என்ன நடந்தது என்று விசாரித்திருக்கிறார்.

அவர் விசாரித்து கொண்டிருக்கும்போதே அந்த அமைப்பினர் இஸ்லாமிய இளைஞரை மீண்டும் தாக்க முயன்றனர். எனவே சுகன்தீப் சிங் உடனடியாக இளைஞரை கட்டியணைத்து அவர் மீதான் தாக்குதல்களை  தடுக்கிறார்.

பின்னர் அந்த இளைஞரை அங்கிருந்து பாதுகாப்பாக கூட்டி சென்றிருக்கிறார். இந்த சம்பவம் தொடர்பான விடியோவும் புகைப்படங்களும் தற்போது இணையதளத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

விடியோ:

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பழனி கோயிலுக்கு ரூ.36.51 லட்சத்துக்கு கரும்பு சா்க்கரை கொள்முதல்

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

திரௌபதி அம்மன் கோயில் திருவிழா மே 13-இல் தொடக்கம்

விறுவிறுப்படையும் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

பளியா் பழங்குடியினா் இதுவரை அரசு பணி வாய்ப்பே பெறவில்லை

SCROLL FOR NEXT