இந்தியா

நேஷனல் ஹெரால்டு வழக்கு: சுவாமியின் மனுக்கள் தள்ளுபடி

தினமணி

நேஷனல் ஹெரால்டு வழக்கில் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தாக்கல் செய்திருந்த மனுக்களை தில்லி பெருநகர நீதிமன்றம் நிராகரித்துவிட்டது. அவரது மனுக்கள் எதுவும் தற்போது நடைபெறும் விசாரணைக்கு ஏற்புடையதாக இல்லை என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
 மறைந்த பிரதமர் ஜவாஹர்லால் நேருவால், கடந்த 1938ஆம் ஆண்டில் நேஷனல் ஹெரால்டு ஆங்கிலப் பத்திரிகை தொடங்கப்பட்டது. இதை "அசோசியேட்டட் ஜர்னல்ஸ்' நிறுவனம் நடத்தி வந்தது. நிர்வாகச் சீர்கேடு, விற்பனைச் சரிவு உள்ளிட்ட காரணங்களால் 2008-ஆம் ஆண்டு இந்த பத்திரிகை நிறுத்தப்பட்டது.
 இந்தப் பத்திரிகையை மேம்படுத்த ரூ.90.25 கோடி அளவுக்கு காங்கிரஸ் கட்சி வட்டியில்லா கடன் அளித்ததைக் காரணம் காட்டி, "அசோசியேட்டட் ஜர்னல்ஸ்' நிறுவனத்தை ராகுல், சோனியா உள்ளிட்டோர் பங்குதாரர்களாக உள்ள யங் இந்தியா நிறுவனம் கடந்த 2010-இல் கையகப்படுத்தியது.
 இதன் மூலம் அசோசியேட்டட் ஜர்னல்ஸ் நிறுவனத்தின் ரூ.2000 கோடி மதிப்புள்ள சொத்துகளை யங் இந்தியா நிறுவனம் அபகரித்துவிட்டதாக குற்றம்சாட்டி பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தில்லி நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார்.
 மேலும், இதுதொடர்பாக சில ஆவணங்களையும் அ வர் சமர்ப்பித்தார். அவை அசலானவை என்பதை சோனியா, ராகுல் உள்ளிட்டோர் ஒன்று ஏற்றுக் கொள்ள வேண்டும் அல்லது மறுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியிருந்தார். இதுதொடர்பாக ஒரு மனுவையும் சுப்பிரமணியன் சுவாமி தாக்கல் செய்திருந்தார்.
 மேலும், காங்கிரஸிடம் இருந்து குறிப்பிட்ட சில ஆவணங்களைப் பெறக் கோரியும், வருமான வரித் துறை ஆவணங்களை வழக்கில் ஆதாரமாக எடுத்துக் கொள்ளக் கோரியும் கூடுதலாக இரு மனுக்களையும் சுப்பிரமணியன் சுவாமி தாக்கல் செய்திருந்தார்.
 அவற்றின் மீதான விசாரணை தில்லி பெருநகர நீதிமன்ற நீதிபதி விஷால் முன்பு சனிக்கிழமை விசாரணைக்கு வந்தது. சோனியா, ராகுல் பதிலளிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை பரிசீலித்த நீதிபதி, அவை வழக்கில் தொடர்பு இல்லாமல் இருப்பதாகக் கூறப்படுவதைக் காரணமாகக் காட்டி அதை நிராகரித்தார். அதேபோன்று மற்ற இரு மனுக்களையும் தற்போது விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று கூறி தள்ளுபடி செய்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாமக்கல்: பிளஸ் 2 பொதுத் தேர்வில் 96.10% தேர்ச்சி

ஒடிஸாவில் பாஜக முதல்வர் ஜூன் 10-ல் பதவியேற்பார்: மோடி

வைரலாகும் தக் லைஃப்!

பிளஸ்2 பொதுத்தேர்வு: திருவள்ளூர் மாவட்டத்தில் 23,401 பேர் தேர்ச்சி

பிளஸ் 2 பொதுத் தேர்வு: விழுப்புரம் மாவட்டத்தில் 93.17% தேர்ச்சி

SCROLL FOR NEXT