நேருவின் 54-ஆவது நினைவு தினம்: ட்விட்டரில் மோடி அஞ்சலி
இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் நினைவு தினத்துக்கு பிரதமர் மோடி ட்விட்டரில் அஞ்சலி செலுத்தியுள்ளார்.
இன்று (ஞாயிற்றுக்கிழமை) இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 54-ஆவது நினைவு தினம். இதற்கு தற்போதைய பிரதமர் மோடி ட்விட்டரில் தனது அஞ்சலியை செலுத்தினார்.
இதே நேரத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் ராஜ் காட் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.
ஜவஹர்லால் நேரு 1964-ஆம் ஆண்டு மே 27-ஆம் தேதி காலமானார்.
Advertisement