இந்தியா

ஜம்மு-காஷ்மீரில் இதுவரை 619 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்: ராஜ்நாத் சிங்

Raghavendran

ஜம்மு-காஷ்மீரில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவங்களில் இதுவரை 619 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக ராஜ்நாத் சிங் செவ்வாய்கிழமை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு உள்நாட்டிலும், எல்லையோரப்பகுதிகளிலும் பயங்கரவாதத்தை ஒடுக்குவதில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஜம்மு-காஷ்மீர் எல்லைப்பகுதியில் இதுவரை 619 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

ரம்ஜான் காரணமாகவே அங்கு தற்காலிகமாக பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. ஆனால், பயங்கரவாத தாக்குதல் சம்பவம் நடந்தால் அதற்கு தக்க பதிலடி தர தயாராக உள்ளோம். பாதுகாப்புப் படை வீரர்களின் கைகளை நாங்கள் கட்டவில்லை. எனவே தான் சமீபத்தில் நடந்த பயங்கரவாத அத்துமீறல் சம்பவத்தில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

நாட்டின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 1997-ஆம் ஆண்டை விட பாதுகாப்புப் படை வீரர்கள் மற்றும் பொதுமக்களின் மீதான பயங்கரவாத தாக்குதல் சம்பவங்கள் தற்போது 2017-ஆம் ஆண்டு வரை 96 சதவீதம் குறைந்துள்ளது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொழிலாளி தற்கொலை

வீரபாண்டி கெளமாரியம்மன் கோயில் தேரோட்டம்

சின்னமனூா் அருகே தொழிலாளி தற்கொலை

ஜெகதாபட்டினத்தில் புதிய மீன்பிடி துறைமுகம்: தமிழக அரசு நடவடிக்கை

அட்சய திருதியை: பத்மாவதி தாயாருக்கு முத்தங்கி அலங்காரம்

SCROLL FOR NEXT