இந்தியா

காதலனுக்கு மனைவியைத்  திருமணம் செய்து வைத்த கணவன்: உ.பியில் சினிமா பாணி சம்பவம் 

திருமணத்திற்குப் பின்னரும் காதலனை மறக்க முடியாத மனைவிக்கு, கணவனே முன்னின்று காதலனுடன் திருமணம் செய்து வைத்த சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் நிகழ்ந்துள்ளது

DIN

கான்பூர்: திருமணத்திற்குப் பின்னரும் காதலனை மறக்க முடியாத மனைவிக்கு, கணவனே முன்னின்று காதலனுடன் திருமணம் செய்து வைத்த சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் நிகழ்ந்துள்ளது.  

உத்தரபிரதேச மாநிலம் லக்னௌவின் ஷியாம் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சாந்தி. இவருக்கும் அருகில் உள்ள சனிக்வான் பகுதியைச் சேர்ந்த சுஜித் என்ற வாலிபருக்கும் பெற்றோர்கள் திருமணம் செய்து வைத்தனர். கடந்த பிப்ரவரி மாதம் இவர்களது திருமணம் நடந்தது.

திருமணத்திற்குப் பிறகு ஒரு மாதம் மட்டுமே இருவரும் சேர்ந்து வாழ்ந்தனர். இந்நிலையில் பெற்றோர் வீட்டுக்கு சென்ற சாந்தி, அதன் பிறகு மீண்டும் கணவர் வீட்டுக்குத் திரும்பவில்லை.  இதைத் தொடர்ந்து சுஜித் நேரடியாக சாந்தி வீட்டுக்கு சென்று அழைத்த பொழுதும் சாந்தி மறுத்து விட்டார்.

பிறகு அவரிடம் சுஜித் தனியாக விசாரித்த பொழுதான், தான் முன்னரே ரவி என்பவரை காதலித்து வந்ததாகவும்  ஆனால் தனது சம்மதததை  கேட்காமல் பெற்றோர் உங்களுடன் திருமணம் செய்து வைத்து விட்டனர் என்று சாந்தி தெரிவித்துள்ளார். அத்துடன் தன்னால் காதலன் நினைவுகளுடன் உங்களுடன் வாழ முடியவில்லை என்பதையும் கூறியுள்ளார்.

இதைத் தொடர்ந்து யோசித்த சுஜித், தனது மனைவியை காதலனுடன் சேர்த்து வைப்பதே சரியான முடிவு என்று தீர்மானித்தார். இரு வீட்டாருடனும் பேசினார்.

அதன்படி புதனன்று சுஜித் சனிக்வான் பகுதியில் உள்ள அனுமன் கோவிலுக்கு மனைவி சாந்தியையும், அவரது காதலன் ரவியையும் வரவழைத்தார். அத்துடன் இருதரப்பு உறவினர்களும் வந்தனர். அவர்கள் முன்னிலையில் மனைவி சாந்தியை, அவரது காதலன் ரவியிடம் ஒப்படைத்தார். இருவரும் கோவிலிலேயே உறவினர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர். இந்த சம்பவமானது அங்கு கூடியிருந்த அனைவருக்கும் ஆச்சர்யத்தினை ஏற்படுத்தியது.     

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பவானிசாகர் அணை நீர் மட்டம் உயர்வு: வெள்ள அபாய எச்சரிக்கை!

பாகிஸ்தான் பந்துவீச்சை அடித்து நொறுக்கிய ஏபிடி... லெஜெண்ட்ஸ் கோப்பையை வென்றது தெ.ஆ.!

கேரளத்தில் சிறுத்தையிடம் இருந்து 4 வயது மகனைக் காப்பாற்றிய தந்தை !

3 கோடி பார்வைகளைக் கடந்த பொட்டல முட்டாயே பாடல்!

வைல்ட் ஃபிளவர்... அமைரா தஸ்தூர்!

SCROLL FOR NEXT