இந்தியா

பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா -ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் சந்திப்பு 

மும்பையில் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா - ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்தை வெள்ளியன்று காலை சந்தித்துப் பேசினார். 

ANI

மும்பை: மும்பையில் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா - ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்தை வெள்ளியன்று காலை சந்தித்துப் பேசினார். 

மும்பையில் உள்ள பயாந்தர் பகுதியில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் தேசிய செயற்குழுக் கூட்டம் வெள்ளியன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் மற்றும் பல்வேறு முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். 

இந்த கூட்டத்தின் இடையே பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா - ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்தை சந்தித்துப் பேசினார். 

அவர்கள் இருவரும் என்ன பேசினார்கள் என்பதைக் குறித்து எவும் தெரிவிக்காத ஆர்எஸ்எஸ் வட்டாரங்கள், அமைப்பின் செயலாளர் பையா ஜி ஜோஷி விரைவில் செய்தியாளர்களிடம் இதுகுறித்து பேசுவார் என்று தெரிவித்தன. 

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக நிலத்தைக் கையகப்படுத்தி பாராளுமன்றத்தில் தனியாக சட்டம் இயற்ற வேண்டும் என்று சமீபத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பு தெரிவித்திருந்த சூழ்நிலையில், இந்த சந்திப்பு மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எல்லையில் பதற்றம்! பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச்சூடு - சண்டை நிறுத்தம் மீறல்!

உயிர்த்தெழும் ஓவியமே... ப்ரீத்தி சர்மா!

வங்கதேசத்தில் 2026 பிப்ரவரியில் பொது தேர்தல்! இடைக்கால அரசு அறிவிப்பு!

அனில் அம்பானியிடம் 9 மணி நேரம் விசாரணை: பிடியை இறுக்கும் அமலாக்கத் துறை!

கோபி, சுதாகரின் ஓ காட் பியூட்டிஃபுல் புரோமோ விடியோ!

SCROLL FOR NEXT