இந்தியா

போஃபர்ஸ்: 2005ல் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து 2018ல் மேல்முறையீடு செய்த சிபிஐ மனு தள்ளுபடி

போஃபர்ஸ் பீரங்கி ஊழல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து சிபிஐ தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.

PTI


புது தில்லி: போஃபர்ஸ் பீரங்கி ஊழல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து சிபிஐ தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.

போஃபர்ஸ் பீரங்கி ஊழல் வழக்கை விசாரித்த தில்லி உயர் நீதிமன்றம் குற்றஞ்சாட்டப்பட்டவர்களை சுமார் 13 ஆண்டுகளுக்கு முன் அதாவது கடந்த 2005ம் ஆண்டு விடுதலை செய்து தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து சிபிஐ சார்பில் கடந்த பிப்ரவரி மாதம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

சிபிஐ செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரிப்பது குறித்து பரிசீலித்த உச்ச நீதிமன்றம், மேல்முறையீடு செய்ய சிபிஐ எடுத்துக் கொண்ட கால அவகாசத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என்று கூறி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

கடந்த 1986ம் ஆண்டு ராஜீவ் காந்தி பிரதமராக இருந்த போது போஃபர்ஸ் பீரங்கி ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்ததாக வழக்குத் தொடரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கூத்தாநல்லூரில் ஆடிப்பெருக்கு

கூட்டுறவு முழுநேர பட்டயப் படிப்பில் சேர காலநீட்டிப்பு

பாஜக ஆளும் மாநிலங்களில் பெண்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்!

சிறு, குறு நிறுவனங்களுக்கு மானிய உதவி

திமுக கூட்டணியில் மமக தொடரும்: எம்.எச். ஜவாஹிருல்லா

SCROLL FOR NEXT