இந்தியா

மத்தியப் பிரதேச முதல்வர் ஷிவ்ராஜ் சிங் சௌஹானின் மைத்துனர் காங்கிரஸில் இணைந்தார்

மத்தியப் பிரதேச முதல்வர் ஷிவ்ராஜ் சிங் சௌஹானின் மைத்துனர் சஞ்சய் சிங் மாசானி இன்று காங்கிரஸ் கட்சியில் இருந்தார்.

IANS


புது தில்லி: மத்தியப் பிரதேச முதல்வர் ஷிவ்ராஜ் சிங் சௌஹானின் மைத்துனர் சஞ்சய் சிங் மாசானி இன்று காங்கிரஸ் கட்சியில் இருந்தார்.

ஷிவ்ராஜ் சிங் சௌஹானின் மனைவி சாதனாவின் சகோதரர் மாசானி. இன்று மத்தியப் பிரதேச காங்கிரஸ் கட்சியின் தலைவர் கமல் நாத் முன்னிலையில் மாசானி தன்னை காங்கிரஸில் இணைத்துக் கொண்டார்.

மத்தியப் பிரதேசத்தில் நடைபெற உள்ள பேரவைத் தேர்தலில், தனக்கு தொகுதி ஒதுக்கப்படாததால், அதிருப்தி அடைந்து அக்கட்சியில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளதாக மாசானி கூறியுள்ளார்.

மேலும், கட்சியில் பதவி வகிக்கும் நபர்களின் மகன், மகளுக்கே முன்னுரிமை அளிக்கப்படுகிறது. கட்சிக்காக பாடுபட்டவர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்றும் மாசானி தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜாய் கிரிசில்டா குழந்தைக்கு நான்தான் தந்தை!! ஒப்புக்கொண்ட மாதம்பட்டி ரங்கராஜ்

பாரதியின் காளி

கிட்னி முறைகேடு: அரசு வழக்கறிஞர் முறையாக வாதிடவில்லை! - இபிஎஸ் குற்றச்சாட்டு

உலகப் புகழ்பெற்ற நாட்டுப்புறவியல் கட்டுரைகள்

சுவிஸ் தமிழ் எழுத்தாளர்கள் (தொகுதி 1)

SCROLL FOR NEXT