இந்தியா

காஷ்மீரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 9 வயது சிறுமி பலி 

DIN

ஜம்மு: ஜம்மு காஷ்மீரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 9 வயது சிறுமி பலியான சம்பவம் அதிர்ச்சியான ஏற்படுத்தியுள்ளது. 

ஜம்மு காஷ்மீரில் கடந்த சில நாட்களாக கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது.  இதனால் நகரில் பல இடங்களில் சாலைப் போக்குவரத்து பாதிப்படைந்து உள்ளது. பனிப்பொழிவை அடுத்து நகரில் பல இடங்களில் நில சரிவும் ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக ரஜோரி மாவட்டத்தில் உள்ள சத்யார் கிராமம் அருகே ஒரு குடும்பத்தினர் அமைத்திருந்த தற்காலிக கூடாரம் நிலச்  சரிவில் சிக்கியது.

இந்த சம்பவத்தில் சபீனா கவுசர் (9) என்ற சிறுமி பலியானாள். அத்துடன் அவர்களது குடும்பத்தின் 3 பேர் பலத்த காயமடைந்தனர். உடனடியாக அவர்கள் மேல்சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

அதேசமயம் ஜம்மு காஷ்மீர் தேசிய நெடுஞ்சாலையில் ஜவஹர் சுரங்க பாதை அருகே கடுமையான பனிப்பொழிவு மற்றும் நிலச் சரிவுகளால் வாகனங்களில் சிக்கித் தவித்த 200-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு அருகிலுள்ள பனிஹல் பகுதிக்கு கொண்டு வரப்பட்டு, பாதுகாப்பு முகாம்கள், ஓட்டல்கள் மற்றும் மத தலங்களில் தங்க வைக்கப்பட்டனர்.  

இந்த வாகன நெரிசலில் ஜம்மு நோக்கி சென்ற பாதுகாப்பு படையினரின் வாகனமும் சிக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது. பின்னர் அதில் இருந்து வீரர்கள் மீட்கப்பட்டனர்.

அதேபோல் பனிப்பொழிவின் காரணமாக தொடர்ந்து இரண்டாவது நாளாக ஸ்ரீநகரில் விமான சேவைகள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

படிப்புடன் கூடுதல் திறமைகளை வளா்த்துக்கொள்ள வேண்டும்: மாநில தகவல் ஆணையா்

ஏரி, குளங்களை தூா்வார நிதி ஒதுக்க வேண்டும்: மாா்க்சிஸ்ட் வலியுறுத்தல்

ஆட்டோ ஓட்டுநா் வெட்டிக் கொலை

கயிறு இறுக்கி சிறுமி உயிரிழப்பு

உற்பத்தியில் உச்சம் தொட்ட சிபிசிஎல்

SCROLL FOR NEXT