இந்தியா

பட்டாசு வெடிப்பு எதிரொலி: தில்லியில் அபாய அளவை எட்டியது காற்று மாசு!

DIN

தில்லியில் உச்சநீதிமன்ற உத்தரவை மீறி பல இடங்களில் பட்டாசுகள் வெடிக்கப்பட்டதன் காரணமாக, தீபாவளி மறுதினமான வியாழக்கிழமையன்று காற்றின் தரம் அபாய அளவை எட்டியது.
 தில்லியில் தீபாவளிக்கு பசுமைப்பட்டாசுகள் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும், இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் பல்வேறு கட்டுப்பாடு விதித்திருந்தும், தில்லி காற்று மாசு கடந்த ஆண்டை விட நிகழாண்டு இரண்டு மடங்கு அதிகரித்தது.
 இது தொடர்பாக, மத்திய அரசின் காற்று மாசு ஆய்வு மையத்தின் (சஃபர்) அதிகாரி கூறுகையில், "தில்லியில் வியாழக்கிழமை ஒட்டுமொத்தக் காற்றின் தரக் குறியீடு 642 ஆக பதிவாகி இருந்தது. இது "மிகவும் அபாய' பிரிவின்கீழ் வருகிறது' என்று கூறினர்.
 காற்றின் ஒட்டுமொத்த தரக் குறியீடு 0 முதல் 50 வரை இருந்தால் நல்ல பிரிவிலும், 51 முதல் 100 புள்ளிகள் வரை இருந்தால் திருப்திகரமான பிரிவிலும், 101 முதல் 200 வரை இருந்தால் மிதமான பிரிவிலும், 201 முதல் 300 வரை இருந்தால் மோசமான பிரிவிலும், 301 முதல் 400 வரை இருந்தால் மிகவும் மோசமான பிரிவிலும், 401 முதல் 500 வரை இருந்தால் கடுமையான பிரிவிலும், 500க்கும் மேல் இருந்தால் மிகவும் அபாயகரமான பிரிவிலும் இடம்பெறும்.
 மிகவும் அபாயகர பிரிவு காற்றின் தரக் குறியீடானது ஆரோக்கியமான நபர்களையும் பாதிக்கும். வெளிப்புறப் பகுதியில் இருப்பவர்களுக்கு சுவாசக் கோளாறு பிரச்னைகளை ஏற்படுத்தும் என்று சஃபர் வெளியிட்ட அறிவுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளி மற்றும் இதர பண்டிகைகளின்போது தில்லியில் இரவு 8 மணி முதல் 10 மணி வரை பட்டாசு வெடிக்க அனுமதி அளித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
 உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தபோதிலும் குறிப்பிட்ட இடங்களில் நீதிமன்றம் நிர்ணயித்திருந்த நேரத்திற்கும் முன்னும், பின்னும் பட்டாசுகள் வெடிக்கப்பட்ட விதிமீறல்கள் நிகழ்ந்தன. உச்சநீதிமன்ற விதிகளை மீறி பட்டாசு வெடித்ததாக இந்திய தண்டனைச் சட்டத்தின் 188-வது பிரிவின்கீழ் 562 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 310 பேர் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

25 ஆண்டுகளுக்குப் பின் காந்தி குடும்பம் போட்டியிடாத அமேதி! ஸ்மிருதி இராணி கருத்து

யாரோ இவர் யாரோ? அந்த ஓவியாவேதான்...

பிங்க் ரோஸ்...ஸ்ரீதேவி

சிசோடியா ஜாமீன் மனு: சிபிஐ, அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவு!

‘ஆவேஷம்’ பட டிரெண்டிங்கில் இணைந்த பாட் கம்மின்ஸ்!

SCROLL FOR NEXT