இந்தியா

முதல் உலகப் போரில் பங்கெடுத்த வீரர்களுக்கு பிரதமர் மோடி அஞ்சலி

DIN

முதல் உலகப் போரில் பங்கேற்ற இந்திய ராணுவ வீரர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தினார்.
 முதலாம் உலகப் போர் முடிவுக்கு வந்து நூறாண்டுகள் நிறைவடைந்துவிட்டன.
 இதையொட்டி, பிரதமர் மோடி ஞாயிற்றுக்கிழமை சுட்டுரையில் வெளியிட்ட தொடர் பதிவுகளில் கூறியுள்ளதாவது:
 இன்றுடன் (நவ.11) முதலாம் உலகப் போர் நிறைவடைந்து நூறாண்டுகள் நிறைவடைந்து விட்டன. உலக அமைதிக்காக இந்திய ராணுவ வீரர்கள் முதலாம் உலகப் போரில் பங்கெடுத்தனர்.
 இதில் பங்கெடுத்த இந்திய வீரர்களின் துணிவு எப்போதும் நினைவில் கொள்ளப்படும். முதலாம் உலகப் போரில் இந்தியா நேரடியாக பங்கெடுக்கவில்லை என்று அந்தப் பதிவுகளில் மோடி குறிப்பிட்டுள்ளார்.
 பிரான்ஸில் உள்ள முதலாம் உலகப் போர் நினைவகத்திலும், இஸ்ரேலில் உள்ள நினைவகத்திலும் தாம் மரியாதை செலுத்தியதையும் மோடி அந்தப் பதிவுகளில் நினைவுகூர்ந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

வெண்பனிச்சாரல்!

SCROLL FOR NEXT