இந்தியா

மேற்கு வங்கத்தில் ரத யாத்திரையை தடுப்பவர்களின் தலைகள் சக்கரங்களின் கீழ் நசுக்கப்படும்: மாநில பாஜக 

DIN

மால்டா: நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு மேற்கு வங்கத்தில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ள ரத யாத்திரையைத் தடுப்பவர்களின் தலைகள் சக்கரங்களின் கீழ் நசுக்கப்படும் என்று மாநில மகளிர் அணித் தலைவர்  லாக்கெட் சாட்டர்ஜி பேசியுள்ளார். 

விரைவில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு மேற்கு வங்கத்தில் உள்ள 42 மக்களவை தொகுதிகளில் ரத யாத்திரைகளை நடத்த பாரதிய ஜனதா கட்சி திட்டமிட்டுள்ளது.  அதன்படி டிசம்பர் 5, 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் மூன்று ரத யாத்திரைகளை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இந்தப் பேரணிகளை பாஜகவின் தேசியத் தலைவர் அமித் ஷா தொடங்கி வைப்பார் எனவும், இறுதியாக கொல்கத்தா நகரில் நடக்க உள்ள மாபெரும் பேரணியில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்ற வாய்ப்பிருப்பதாகவும் மாநில பாஜக வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன 

இந்நிலையில் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு மேற்கு வங்கத்தில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ள ரத யாத்திரையைத் தடுப்பவர்களின் தலைகள் சக்கரங்களின் கீழ் நசுக்கப்படும் என்று மாநில மகளிர் அணித் தலைவர்  லாக்கெட் சாட்டர்ஜி பேசியுள்ளார். 
 
மால்டாவில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அக்கட்சியின் மாநில மகளிர் அணி தலைவரான லாக்கெட் சாட்டர்ஜி, நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு மேற்கு வங்கத்தில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ள ரத யாத்திரையைத் தடுக்க எண்ணுபவர்களின் தலைகள் அந்த ரதச்  சக்கரங்களின் கீழ் நசுக்கப்படும் எனக் கூறினார்.

அவரது பேச்சுக்கு தற்போது கடும் கணடனம் எழுந்துள்ளது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹூதிக்கள் தாக்குதலில் எண்ணெய்க் கப்பல் சேதம்

அமேதி, ரே பரேலி தொகுதி காங்கிரஸ் வேட்பாளா்கள் யாா்?: காா்கே பதில்

மண் கடத்தல்: பொதுமக்களை மிரட்டிய நபா் கைது

இரு கட்டத் தோ்தலும் பாஜகவுக்கு சாதகம்: பிரதமா் மோடி

மணிப்பூா்: தீவிரவாத தாக்குதலில் 2 சிஆா்பிஎஃப் வீரா்கள் உயிரிழப்பு

SCROLL FOR NEXT