இந்தியா

ரிசர்வ் வங்கியின் மூலதன வரைவுத் திட்டத்தை நிர்ணயிப்பதில் மத்திய அரசுக்கு அவசரம் ஏன்?

DIN

மத்திய அரசின் ஆட்சிக் காலம் நிறைவடைய இன்னும் 4 மாதங்களே உள்ள நிலையில், ரிசர்வ் வங்கியின் மூலதன வரைவுத் திட்டத்தை நிர்ணயிப்பதில் மத்திய அரசு ஏன் அவசரமாகச் செயல்படுகிறது? என்று மத்திய முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
 இதுதொடர்பாக அவர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட தனது சுட்டுரை பதிவுகளில் கூறியிருந்ததாவது:
 தேசிய ஜனநாயக கூட்டணி தலைமையிலான மத்திய அரசு தனது ஆட்சிக் காலத்தில் 4 ஆண்டுகள், 6 மாதத்தை நிறைவு செய்துவிட்டது. அதன் ஆட்சிக் காலம் நிறைவடைய இன்னும் 4 மாதங்களே உள்ள நிலையில், ரிசர்வ் வங்கியின் மூலதன வரைவுத் திட்டத்தை நிர்ணயிக்க மத்திய அரசு ஏன் இத்தனை அவசரம் காட்டுகிறது?
 நடப்பு நிதியாண்டில் மத்திய அரசுக்கு நிதித் தேவைகள் ஏதும் இல்லை என்ற பட்சத்தில், கடைசி 4 மாதங்களுக்காக ஏன் ரிசர்வ் வங்கி மீது அழுத்தம் கொடுக்கப்படுகிறது? கடந்த 4 ஆண்டுகளாக ஏன் மத்திய அரசு இந்த விவகாரத்தில் மெளனம் காத்து வந்தது? நடப்பு நிதி நிலை சரியான வகையில் இருப்பதாகவும், 2018-19 காலகட்டத்துக்கான ரூ.70,000 கோடி கடனை விட்டுக் கொடுத்ததாகவும் மத்திய அரசு பெருமிதம் தெரிவிக்கிறது.
 அப்படியானால், ரிசர்வ் வங்கியின் ரொக்க இருப்பிலிருந்து மத்திய அரசுக்கு ஏன் நிதி தேவைப்படுகிறது? என்று சிதம்பரம் அந்த பதிவுகளில் கேள்வி எழுப்பியுள்ளார்.
 முன்னதாக, ஆர்பிஐ ரொக்க இருப்பில் இருந்து ரூ.3.6 லட்சம் கோடியைப் பெற மத்திய அரசு முயற்சித்து வருவதாக காங்கிரஸ் சமீபத்தில் குற்றம்சாட்டியது. "தவறான பொருளாதாரக் கொள்கைகள், முடிவுகளால் நாட்டின் நிதி நிலையை மத்திய அரசு மோசமாக்கிவிட்டதாகவும், அதன் காரணமாக ஆர்பிஐயிடம் அந்தத் தொகையை கேட்டு வருவதாகவும் ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.
 எனினும், அதற்கு பதிலளித்த பொருளாதார விவகாரத் துறை செயலர் சுபாஷ் சந்திர கர்க், மத்திய அரசின் நிதிநிலை சிறப்பாக உள்ளதாகவும், ஆர்பிஐ-யின் பொருளாதார மூலதன வரைவுத் திட்டத்தை சிறப்பாக வடிவமைப்பது குறித்து மட்டுமே ஆலோசனை நடைபெற்று வருவதாகவும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமருகலில் மே 5-இல் கடையடைப்பு

ராமநாதபுரம் அருகே வட மாநில கா்ப்பிணிப் பெண் கொலை

‘பொது வெளியில் கழிவு நீரை திறந்து விட்டால் கடும் நடவடிக்கை’

பரமக்குடி- மதுரை இடையே இடைநில்லா குளிா்சாதன பேருந்து இயக்கக் கோரிக்கை

ஓட்டப்பிடாரம் அருகே மாட்டுவண்டி போட்டி

SCROLL FOR NEXT