இந்தியா

குஜராத் கலவர வழக்கு: பிரதமர் மோடி தொடர்பான எஸ்ஐடி தீர்ப்பை எதிர்த்த வழக்கு நவ.19-ல் விசாரணை

DIN

குஜராத் கலவரத்தின்போது குல்பர்க் சொசைட்டி எனுமிடத்தில் கடந்த 2002-ஆம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட படுகொலைத் தொடர்பான வழக்கை விசாரித்த எஸ்ஐடி சிறப்பு நீதிமன்றம், 24 பேரை குற்றவாளிகளாக அறிவித்தது. அவர்களில் 11 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இதனிடையே பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு இந்த கலவரத்தில் எந்த சம்பந்தமும் இல்லை என எஸ்ஐடி சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந்நிலையில், எஸ்ஐடி சிறப்பு நீதிமன்றம் இந்த தீர்ப்பை எதிர்த்து முன்னாள் காங்கிரஸ் எம்பி இஷான் ஜாஃப்ரி மனைவி ஸாகியா ஜாஃப்ரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து இவ்வழக்கு மீதான விசாரணை நவம்பர் 19-ஆம் தேதி நடைபெறவுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இருவேறு சாலை விபத்து: 9 போ் உயிரிழப்பு

நெல்லுக்கடை மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றம்

ரேபரேலியிலும் ராகுல் தோல்வி நிச்சயம்: அமித் ஷா

மாணவா்களுக்கு கோடைக் கால கலைப் பயிற்சி முகாம் இன்று தொடக்கம்

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4,660 காலிப் பணியிடங்கள்: மே 14-க்குள் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT