இந்தியா

அமிருதசரஸில் வீசப்பட்ட குண்டுகள் பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்டவை?: முதல்வர் அமரீந்தர் சிங் சந்தேகம்

DIN

பஞ்சாப் மாநிலம் அமிருதசரஸ் அருகே அட்லிவால் கிராமத்தில்   ஞாயிற்றுகிழமை நிராங்கரி பவன் பிரார்த்தனைக் கூட்டத்தில் மர்மநபர்கள் வீசிய கையெறி குண்டுகள் பாகிஸ்தான் ராணுவத்தின் ஆயுத தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டதென்ற சந்தேகம் எழுந்துள்ளதென பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் திங்கள்கிழமை தெரிவித்தார். 
அமிருதசரஸ் அருகே சந்த் நிராங்கரி மிஷன் சார்பில் நடைபெற்ற ஆன்மிக பிரார்த்தனை கூட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை மோட்டார் பைக்கில் வந்த முகமூடி அணிந்த நபர்கள் கையெறி குண்டுகளை வீசியதில் 3 பேர் உயிரிழந்ததுடன், 20 பேர் காயமடைந்தனர். 
பயங்கரவாதிகளின் நாசவேலை என சந்தேகிக்கப்பட்ட நிலையில், இச்சம்பவம் தொடர்பாக தகவல் அளிப்போருக்கு ரூ.50 லட்சம் சன்மானமாக வழங்கப்படும் என பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் திங்கள்கிழமை அறிவித்திருந்தார்.  
இதுதொடர்பாக பஞ்சாப் போலீஸாரை 181 என்ற இலவச தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும், தகவல் அளிப்போரின் பெயர், இருப்பிடம் குறித்து ரகசியம் காக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. 
இந்நிலையில், முதல்வர் அமரீந்தர் சிங் குண்டு வெடிப்பு இடத்துக்கு நேரில் சென்று பார்வையிட்டார். பின்னர் அவர் கூறியதாவது, ""நிராங்கரி பவன் பிரார்த்தனை கூடத்தில் வீசப்பட்ட கையெறி குண்டுகள் பாகிஸ்தானின் அடையாளங்கள் காணப்படுகிறது. அந்த குண்டுகள் பாகிஸ்தான் ஆயுத தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டவை என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. 
போலீஸாரால் கைப்பற்றப்பட்ட கையெறி குண்டுகளின் துகள்கள் எச்ஜி-84 ரகத்தை சேர்ந்தது என்பதும், கடந்த மாதம் பஞ்சாப்பில் நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்திலும் அதேப்போன்ற குண்டு பயன்படுத்தப்பட்டுள்ளதும், அந்த குண்டு எல்லைத்தாண்டிய நம் எதிரி நாட்டு (பாகிஸ்தான்) படையினராலும், அங்கிருந்து இயங்கும் பயங்கரவாதிகளாலும் பயன்படுத்தப்படும் வெடிப்பொருள் என்பதும் தெரிய வந்துள்ளது. 
பிரிவினைவாத குழுக்களான ஐ.எஸ். பயங்கரவாதிகள், காலிஸ்தான் தீவிரவாதிகள் அல்லது காஷ்மீர் பயங்கரவாதி கும்பல் என இந்த அமைப்புகளை சேர்ந்தவர்களுக்கு தொடர்பிருக்க வாய்ப்புள்ளதாக கருதுகிறோம்.  
விசாரணையில், தேசிய புலனாய்வு முகமைக்குழுவின் விசாரணை அதிகாரிகளும், வெடிகுண்டு நிபுணர்களும் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்'' என்று தெரிவித்தார். பின்னர், குண்டு வெடிப்பில் காயமடைந்தவர்களை மருத்துவமனையில் சந்தித்து ஆறுதல் கூறியதுடன், நிதி உதவியும் வழங்கினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை வெயிலின் தாக்கம் எதிரொலி: 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்காது!

டேவிட் வார்னரின் சாதனையை சமன் செய்த விராட் கோலி!

காங். ஆட்சியில் மத அடிப்படையில் இடஒதுக்கீட்டை அமல்படுத்த திட்டம் -பிரதமர் மோடி பிரசாரம்

நீ, நீயாகவே இரு, உலகம் அனுசரித்துப் போகும்! எதிர்நீச்சல் ஜனனிதான்...

வரலாறு காணாத வெப்பத்திற்கு காரணம் என்ன? : ரமணன் பேட்டி

SCROLL FOR NEXT