இந்தியா

2019-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் போட்டி இல்லை: சுஷ்மா ஸ்வராஜ் அறிவிப்பு 

2019-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் அறிவித்துள்ளார். 

IANS

இந்தூர்: 2019-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் அறிவித்துள்ளார். 

செவ்வாய்க்கிழமை அன்று மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியின் இடையே செய்தியாளர்களிடம்  பேசும்போது அவர் கூறியதாவது:

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை கட்சி முடிவு செய்கிறது. ஆனால் அடுத்த தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்று நான் முடிவு செய்து விட்டேன். 

இவ்வாறு அவர் தெரிவித்தார். 

அதேசமயம் தனது முடிவு குறித்து கட்சித் தலைமைக்கு தெரியப்படுத்தி விட்டதாகவும் அவர் தெரிவித்தார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பூவே உனக்காக... சித்ராங்தா சிங்!

எல்லையில் சண்டை நிறுத்தம் மீறப்படவில்லை! -இந்திய ராணுவம்

மாய கண்கள்... பிரியங்கா ஆச்சார்!

மஞ்சள் மோகினி... டெல்னா டேவிஸ்!

ஓவியம்... பிரியங்கா சௌத்ரி!

SCROLL FOR NEXT