முகப்பு
இந்தியா

காசநோயாளிகளுக்கான புதிய செயலி அறிமுகம்

டிபி மித்ரா (காச நோயாளிகளின் நண்பன்) எனும் புதிய செயலி திங்கள்கிழமை அறிமுகம் செய்யப்பட்டது.

Updated On : 27 நவம்பர், 2018 at 3:09 PM
பகிர்:

டிபி மித்ரா (காச நோயாளிகளின் நண்பன்) எனும் புதிய செயலி திங்கள்கிழமை அறிமுகம் செய்யப்பட்டது.

காசநோயை அழிக்கும் விதமாகவும், அதுதொடர்பான விழிப்புணர்வு மற்றும் மருத்துவ வசதிகள் குறித்து போதிய வழிகாட்டுதல் வழங்கும் விதமாகவும் இந்த புதிய செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய செயலியான ஒடிஸாவில் அம்மாநில அரசின் சுகாதாரத்துறை அமைச்சர் பிரதாப் ஜெனா அறிமுகம் செய்து வைத்தார்.

இந்த புதிய செயலி மூலம் காசநோயாளிகள் தங்களுக்கு தேவையான மருத்துவ சேவைகளை உடனுக்குடன் பெறும் நடைமுறை தொடர்பான வசதியை பெற்றுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஒடிஸாவில் 50 ஆயிரம் பேருக்கு காசநோய் பாதிப்பு ஏற்படுவதாகவும், அவர்களில் 90 சதவீதம் பேருக்கு அரசு மருத்துவமனைகளில் இலவச மருத்துவம் அளிக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் பிரதாப் தெரிவித்தார். 

Advertisement

மேலும் இந்த செயலியின் மூலம் காசநோயாளிகளை எளிதில் கண்டறிந்து அவர்களுக்கு தேவையான மருத்துவத்தை உடனடியாக அளிக்க எளிமையாக இருக்கும் எனவும் அமைச்சர் தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.