இந்தியா

விமான நிலையத்தில் நவீன காவல் நிலையம்: நவீன் பட்நாயக் துவக்கி வைப்பு

ஒடிஸாவின் பிஜூ பட்நாயக் சர்வதேச விமான நிலையத்தில் நவீன காவல் நிலையத்தை அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக், திங்கள்கிழமை துவக்கி வைத்தார்.

ENS

ஒடிஸாவின் பிஜூ பட்நாயக் சர்வதேச விமான நிலையத்தில் நவீன காவல் நிலையத்தை அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக், திங்கள்கிழமை துவக்கி வைத்தார். இது அங்கு அமையும் 24-ஆவது காவல் நிலையம் ஆகும். மேலும் வெளிநாடுகளில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளின் தேவைகள் தொடர்பாக இக்காவல் நிலையம் அமைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதுமட்டுமல்லாமல் காணொளி மூலம் 35 நவீன காவல் நிலையங்கள், 12 சிறப்பு ரோந்து வாகனங்கள், ஹாக்கி உலகக் கோப்பை தொடர்பாக கண்காணிப்பில் ஈடுபட 33 காவல் வாகனங்கள், 35 புதிய ரோந்து வாகனங்கள் மற்றும் 70 இரு சக்கர ரோந்து காவல் வாகனங்கள் ஆகியவற்றையும் துவக்கி வைத்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாலை மறியல் ஈடுபட்ட கிராம ஊழியா் சங்கத்தினா் 80 போ் கைது

கே. என். நேரு வென்ற தொகுதியில் 42 ஆயிரம் போ் நீக்கம்

இரட்டை பிரபை வாகனத்தில் நம்பெருமாள்

திருமணமான 3 நாளில் பெண் தூக்கிட்டுத் தற்கொலை

மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

SCROLL FOR NEXT