முகப்பு
இந்தியா

பரம்பரை எதிரிகள் ஒரே மேடையில்: இதை எப்படி எடுத்துக் கொள்வார்கள் மக்கள்?

தெலுங்கு அரசியலில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதை அரசியல் ஏற்றுக் கொள்ளும்.. மக்கள் எப்படி எடுத்துக் கொள்வார்கள்.. இதுதான் தற்போதையக் கேள்வி.

Updated On : 28 நவம்பர், 2018 at 11:21 AM
பகிர்:


ஹைதராபாத்: தெலுங்கு அரசியலில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதை அரசியல் ஏற்றுக் கொள்ளும்.. மக்கள் எப்படி எடுத்துக் கொள்வார்கள்.. இதுதான் தற்போதையக் கேள்வி.

முதல் முறையாக, அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தியும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடுவும் இன்று ஒரே மேடையில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள உள்ளனர்.

தெலங்கானா சட்டப்பேரவைத் தேர்தலில் டிஆர்எஸ் தலைவர் சந்திரசேகர ராவை தோற்கடிக்க, 36 ஆண்டு கால பகையை மறந்து காங்கிரஸ் கட்சியும், தெலுங்கு தேசம் கட்சியும் ஒன்றாக இணைந்துள்ளன.

Advertisement

மெஹபூப்நகர் மாவட்டத்தில் இன்று மதியம் 12 மணியளவில் கோஸ்கி என்ற பகுதியில் இந்த பிரசாரம் நடைபெற உள்ளது. 

காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளுக்கு எதிராக சந்திரபாபுவின் மாமனார் என்.டி. ராமாராவ் தொடங்கியதே தெலுங்கு தேசம் கட்சி. ஆனால், இன்று அரசியல் காரணங்களுக்காக பரம்பரை எதிரிகளே இப்படி ஒன்றாகக் கைகோர்த்திருப்பதை மக்கள் எப்படி எடுத்துக் கொள்வார்கள் என்பதை தேர்தல் முடிவுகளே வெளிப்படுத்தும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.