முகப்பு
இந்தியா

மராத்தா இடஒதுக்கீட்டுக்கு முதலில் போராடியது காங்கிரஸ் தான்: அஷோக் சவான்

மராத்தா பிரிவினருக்கான 16 சதவீதத்துக்கான இடஒதுக்கீடு மசோதா அம்மாநில சட்டப்பேரவையில் வியாழக்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. 

Updated On : 30 ஜனவரி, 2024 at 5:45 PM
பகிர்:

மஹாராஷ்டிராவின் மொத்த மக்கள் தொகையில் 30 சதவீதத்தை கொண்டுள்ள மராத்தா பிரிவினருக்கான 16 சதவீதத்துக்கான இடஒதுக்கீடு மசோதா அம்மாநில சட்டப்பேரவையில் வியாழக்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. இதுகுறித்து மஹாராஷ்டிர முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான அஷோக் சவான் கூறியதாவது:

மொத்தம் 58 அமைப்புகளைக் கொண்ட மராத்தா பிரிவினருக்காக சக்கல் மராத்தா சமாஜ் எனும் அமைப்புதான் இடஒதுக்கீடு கோரிக்கையை முன்வைத்தது. இந்த நேரத்தில் இக்கோரிக்கை பேரவையில் தாக்கல் செய்யப்பட்டதற்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

இதை வழங்க முதன்முதலில் காங்கிரஸ் அரசு தான் போராடியது,மேலும் அதை அமல்படுத்தியது. ஆனால் மும்பை உயர் நீதிமன்றத்தில் இதற்கு தடை விதிக்கப்பட்டது. இருப்பினும் தற்போது நிறைவேறியுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. இதை பாஜக மற்றும் சிவசேனா கூட்டணி அரசு வேண்டுமென்றே இந்த நான்கு வருடங்களாக காலம் தாழ்த்தி வந்தது என்று தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.