இந்தியா

நூறாண்டு காலம் வாழ்க என்று வழக்குரைஞர்கள் பாடியதை தடுத்து நிறுத்திய தீபக் மிஸ்ரா

PTI


புது தில்லி: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, இன்றுடன் பணி ஓய்வு பெறுகிறார். இன்று மாலை அவரது பிரியா விடை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகோய் அக்டோபர் 3ம் தேதி பதவியேற்றுக் கொள்ளவிருக்கிறார்.

இன்று காலை உச்ச நீதிமன்றத்துக்கு வந்த தீபக் மிஸ்ராவை சந்தித்த வழக்குரைஞர்கள், நூறாண்டு காலம் வாழ்க என்ற ஹிந்திப் பாடலை ஒன்றாகப் பாடினார்கள்.

உடனடியாக அவர்களை தடுத்து நிறுத்திய தீபக் மிஸ்ரா, நான் தற்போது எனது இதயத்தில் இருந்து பேசுகிறேன். இன்று மாலை எனது மனதில் இருந்து பேசுவேன் என்று கூறிவிட்டார்.

நூறாண்டு காலம் வாழ்க என்ற பொருள்படும் 'தும் ஜியோ ஹசாரன் சால்' என்ற ஹிந்திப் படப் பாடல் 1950ம் ஆண்டு வெளிவந்தது. பொதுவாக இந்தப் பாடலை பிறந்தநாள் நிகழ்ச்சிகளின் போது பாடுவார்கள். அதனை வழக்குரைஞர்கள் தீபக் மிஸ்ராவுக்காக பாடிய போது அதனை அவரே தடுத்து நிறுத்திவிட்டார்.

இன்று ஓய்வு பெறவிருக்கும் தீபக் மிஸ்ரா, அவரது பதவிக் காலத்தில் பல முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்புகளை வழங்கியுள்ளார். உச்ச நீதிமன்றத்தில் சில சர்ச்சைகள் எழுந்து நீதிபதிகள் செய்தியாளர்களை சந்தித்து புகார்களைக் கூறியதும் இவரது பதவிக் காலத்தில் தான்.

தகாத உறவு கிரிமினல் குற்றமாகாது, சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்களுக்கு அனுமதி உள்ளிட்ட சில வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்புகள் இவரது பதவிக் காலத்தில் வழங்கப்பட்டன.

கூடுதல் நீதிபதி முதல் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி வரை..
1996ம் ஆண்டு ஜனவரி 17ம் தேதி ஒடிஸா உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக தீபக் மிஸ்ரா நியமிக்கப்பட்டார்.

1997ம் ஆண்டு டிசம்பரில் நிரந்தர நீதிபதியானார்.

2009ம் ஆண்டு பாட்னா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்றுக் கொண்டார். 2010ல் தில்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியானார்.

2011ம் ஆண்டு உச்ச நீதிமன்ற நீதிபதியாகி, 2017 ஆகஸ்ட் 28ல் தலைமை நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார் தீபக் மிஸ்ரா.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விதவிதமான மோசடிகள்: 18 லட்சம் சிம் கார்டுகள் முடக்கமா?

5-ம் கட்டத் தேர்தல்: மகனுடன் சென்று வாக்கு செலுத்திய சச்சின் டெண்டுல்கர்

தந்தையுடன் வாக்களித்த நடிகை குஷி கபூர்!

ரேபரேலி வாக்குச் சாவடியில் ராகுல் ஆய்வு!

சிறுபான்மையினருக்கு எதிராக ஒரு வார்த்தைகூட பேசியதில்லை: மோடி

SCROLL FOR NEXT