இந்தியா

அதிகமாகச் சத்தம் போடும் காலிப் பாத்திரம்: மத்திய அரசு மீது ஒடிசா முதல்வர் விமர்சனம் 

அதிகமாகச் சத்தம் போடும் காலிப் பாத்திரம் என்று மத்திய அரசை ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். 

IANS

புவனேஸ்வர்: அதிகமாகச் சத்தம் போடும் காலிப் பாத்திரம் என்று மத்திய அரசை ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். 

ஒடிசாவில் ஆட்சி செய்யும் பிஜு ஜனதா தளம் கட்சியின் சாதனைகளை மக்களுக்கு எடுத்துக் கூறும் விதத்தில், 'ஜன சம்பர்க் பாதயாத்ரா' என்னும் பெயரில் பாதயாத்திரையானது இம்மாதம் முழுவதும் மாநிலத்தில் நடைபெற உள்ளது. 

மாநிலத் தலைநகர் புவனேஸ்வரில் செவ்வாயன்று யாத்திரையை கொடியசைத்து துவக்கி வைத்த பின் முதல்வர் நவீன் பட்நாயக் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

ஒடிசா மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவதாக பாஜக தன்னுடைய தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தது. ஆனால் அதன் பிறகு எதுவும் நடக்கவில்லை. நாம் எல்லோருக்கும் தெரிந்ததுதான், 'காலிப் பாத்திரம்தான் அதிகமாகச் சத்தம் போடும்'.    

தேசிய ஜனநாயகக் கூட்டணியானது மக்களின் எதிர்பார்ப்பிற்கு ஏற்றவாறு நடந்து கொள்ளவில்லை. 

ஆனால் அதேசமயம் மாநிலத்தை ஆளும் பிஜு ஜனதா தளம் கட்சியானது தான் அளித்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றியுள்ளது. 

மாநிலத்தை முன்னேற்றுவதற்கு நமக்கு நிதிப் பற்றாக்குறை என்று எதுவும் இல்லை      

மத்திய அரசு கொண்டு வந்த உணவுப் பாதுகாப்பு சட்டத்தில் தகுதியுள்ள பயனாளிகள் விடுபட்டதன் காரணமாக, மாநில அரசு தனியான உணவுப் பாதுகாப்பு சட்டத்தினை கொண்டு வரும் நிலைக்கு தள்ளப்பட்டது. 

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் விலை ஒரே நாளில் ரூ. 1,120 உயர்வு!

உடுமலை விசாரணைக் கைதி மரணம்: வனத்துறை காவலர்கள் இருவர் பணியிடை நீக்கம்!

மலையாள நடிகர் கலாபவன் நவாஸ் விடுதி அறையில் மரணம்

திருச்செந்தூர் வெயிலுகந்தம்மன் கோயில் ஆவணித் திருவிழா கொடியேற்றம்!

ரஷிய எல்லைக்கு 2 அணு ஆயுத நீர்மூழ்கிக் கப்பல்களை அனுப்பிய டிரம்ப்!

SCROLL FOR NEXT