முகப்பு
இந்தியா

4 வயது சிறுமியின் சிறுநீரகத்தில் இருந்த புற்றுநோய்க் கட்டி அகற்றம்

புது தில்லியில் உள்ள மருத்துவமனையில் 4 வயது சிறுமியின் சிறுநீரகத்தில் இருந்த புற்றுநோய்க் கட்டி அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது.

Updated On : 30 ஜனவரி, 2024 at 4:59 PM
பகிர்:


புது தில்லி: புது தில்லியில் உள்ள மருத்துவமனையில் 4 வயது சிறுமியின் சிறுநீரகத்தில் இருந்த புற்றுநோய்க் கட்டி அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது.

அடிவயிற்றில் கடுமையான வலி ஏற்பட்டதை அடுத்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு நடத்தப்பட்ட சோதனையில் அவரது சிறுநீரகத்தில் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வில்ம்ஸ் என்ற கட்டி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

சிறுவர், சிறுமிகளை தாக்கும் புற்றுநோய்க் கட்டியின் ஆரம்பநிலைதான் வில்ம்ஸ் கட்டி. இந்த கட்டி சிறுமியின் உடலை கடுமையாகத் தாக்கியிருந்தது. இதையடுத்து, மிக சிக்கலான அறுவை சிகிச்சையின் மூலம் இடது சிறுநீரகத்தோடு சேர்த்து புற்றுநோய்க் கட்டி அகற்றப்பட்டது.

ஆகஸ்ட் 20ம் தேதி அறுவை சிகிச்சை நடத்தப்பட்டு, அந்த கட்டி பரிசோதனைக்கு அனுப்பியதில், அது புற்றுநோய்க் கட்டி என்பது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, அந்த சிறுமிக்கு கீமோதெரபி சிகிச்சை அளிக்கப்பட உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.