இந்தியா

பிரமோஸ் ஏவுகணை குறித்த தகவல்கள் கசிவு: டி.ஆர்.டி.ஓவில் பணியாற்றி வந்த பாகிஸ்தான் உளவாளி கைது 

DIN

நாக்பூர்: பிரமோஸ் ஏவுகணை குறித்த தகவல்களைக் கசிய விட்டதாக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலையத்தின் நாக்பூர் பிரிவில் பணியாற்றி வந்த பாகிஸ்தான் உளவாளி கைது செய்யப்பட்டான். 

இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலையத்தின் நாக்பூர் பிரிவில் கடந்த நானகு ஆண்டுகளாக, பணியாற்றி வந்தவன் நிஷாந்த் அகர்வால். இந்த பிரிவில் இந்தியாவின் அதிவேக ஏவுகணையான பிரமோஸ்  குறித்த ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.   

இந்நிலையில் பிரமோஸ் ஏவுகணை குறித்த தகவல்களை பாகிஸ்தானுக்கு கடத்தியதாக நிஷாந்த் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்திய ராணுவத்தின் உளவுத்துறை ஒத்துழைப்புடன்  அவன் கைது செய்யப்பட்டுள்ளான்.  தற்போது அவனை மகாராஷ்டிரா மாநில தீவிரவாத எதிர்ப்பு பிரிவு போலீசார் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.

அதிகாரபூர்வ இரகசியக் காப்பு சட்டத்தின் கீழ் நிஷாந்த் மீது வழக்குப்பதிவு  செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.   

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

”தாலி அணியாத பிரியங்கா காந்தி..” -ம.பி. முதல்வர் விமர்சனம்

நிதி ஒதுக்கீட்டில் தமிழகத்துக்கு மத்திய அரசு துரோகம்: வைகோ குற்றச்சாட்டு

குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்

இந்தியன் - 2 இசைவெளியீட்டு விழா எப்போது?

4-வது இடத்தில் சிறப்பாக செயல்படும் ஜடேஜா: சிஎஸ்கே பேட்டிங் பயிற்சியாளர்

SCROLL FOR NEXT