இந்தியா

தூய்மை இந்தியா திட்டத்தின் வெற்றியை கட்டமைக்க இதுவே சரியான தருணம்: பில் கேட்ஸ்

DIN

இந்தியாவில் தூய்மையை மேம்படுத்தும் விதமாக பிரதமரின் தூய்மை இந்தியா திட்டத்தின் வெற்றியை கட்டமைக்க இதுவே சரியான தருணம் என மைக்ரோஸாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் தெரிவித்தார்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு நாடு முழுவதும் தூய்மையை மேம்படுத்த முக்கிய பங்காற்றியுள்ளது. எனவே அதன் வெற்றியில் இருந்து அடுத்த கட்ட நடவடிக்கைகளை கட்டமைக்க இதுவே சரியான தருணம் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பில் கேட்ஸ் பதிவிட்டுள்ளார்.  

இதேபோன்று இந்தியா முழுவதும் ஊட்டச்சத்து குறைபாட்டினை குறைக்க மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகள் தொடர்பாகவும் பில் கேட்ஸ் தனது வாழ்த்தினை தெரிவித்துள்ளார். அப்போது இந்நடவடிக்கைகளை மேற்கொண்டது தொடர்பாக பிரதமர் மோடியை பாராட்டினார். 

கடந்த 2014-ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடியால் தூய்மை இந்தியா திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இதன் கீழ் நாடு முழுவதும் 5 லட்சம் கிராமங்களில் இருந்த திறந்தவெளி கழிப்பறைகளை அகற்றி, இதுவரை சுமார் 8 கோடி கழிப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாகனங்களுக்கு மாசுக் கட்டுப்பாடு சான்றிதழ் வழங்க புதிய செயலி

காா் இயக்க தன்னம்பிக்‘கை’ போதும்! கைகளை இழந்தவருக்கு முதல்முறையாக ஓட்டுநா் உரிமம்

விபத்து நிகழ்ந்த கல் குவாரியிருந்து 2 டன் வெடி பொருள்கள் அகற்றம்

நோயைவிட வேகமாகப் பரவும் வதந்தி!

திருப்பூரில் நாளை புற்றுநோய் விழிப்புணா்வு சைக்கிள் பேரணி

SCROLL FOR NEXT