இந்தியா

ஜனநாயகத்தில் தகவல்களே முதன்மையானவை: ராம்நாத் கோவிந்த் பேச்சு

தினமணி

ஜனநாயகத்தில் தகவல் தொகுப்பை போன்று முதன்மையானது வேறொன்றும் இல்லை என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்தார்.
 அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையிலும் அவர் பேசினார்.
 மத்திய தகவல் ஆணையத்தின் 13-ஆவது வருடாந்திர மாநாட்டை, தில்லியில் ராம்நாத் கோவிந்த் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:
 தகவல்களை அரசு வெளியிடுவதற்கான நடைமுறை மற்றும் ஆவணப் பாதுகாப்பு ஆகியவை தொடர்பாக நாம் ஆய்வு செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. அந்த நடைமுறைகளை நவீனப்படுத்துவது எப்படி? என்பது குறித்து நாம் ஆய்வு செய்ய வேண்டியுள்ளது.
 தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் 5 லட்சத்துக்கும் அதிகமான பொது தகவல் ஆணையர்களை இந்தியா நியமனம் செய்துள்ளது. இந்தச் சட்டத்தின் கீழ், ஆண்டு ஒன்றுக்கு தகவல் கோருபவர்களின் எண்ணிக்கை 60 லட்சத்தை தாண்டியுள்ளது. அது வியக்கத்தக்க எண்ணிக்கையாகும்.
 ஜனநாயகத்தில் தகவல் தொகுப்பை போன்று முதன்மையானது வேறொன்றும் இல்லை. தகவல் பற்றாக்குறையைக் காட்டிலும் தகவல் குவிப்புக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும்.
 தகவல் அறியும் உரிமை என்பது மக்களுக்கும், அரசுக்கும் இடையிலான சமூக நம்பிக்கையை வளர்த்தெடுப்பதாக உள்ளது. இங்கு இரு தரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் நம்பிக்கை வைப்பது கட்டாயமாகும்.
 தகவலை அறியச் செய்வது, நம்பிக்கையை வளர்ப்பது, சாதாரண குடிமகன்களையும் சிறப்புமிக்க இலக்குகளைக் கொண்டவர்களாக மாற்றுவது போன்றவை முக்கியமான நடவடிக்கைகளாகும். வெளிப்படையாக சொல்வதானால் குடிமகன்களை தன்னகத்தே முடிந்து போக விடாமல் தடுப்பது முக்கியமானதாகும்.
 இதுபோன்ற நடவடிக்கைகளை செயல்படுத்தி, ஒரு குடிமகனின் வாழ்வை சிறப்புமிக்கதாக நாம் மேம்படுத்த முடியும் என்றால், அதுவே ஜனநாயகத்தின் முழுமையான வெற்றியாக அமையும் என்றார் அவர்.
 மத்திய அமைச்சர் பேச்சு: முன்னதாக இந்த விழாவில், பிரதமர் அலுவலக அமைச்சர் ஜிதேந்திர சிங் உரையாற்றினார். ஏராளமான தகவல்கள் அரசின் இணையதளங்களிலேயே போதுமானஅளவுக்கு இருக்கும் சூழலில், தேவையற்ற ஆடிஐ மனுக்களை குறைக்கும் நோக்கில் செயல்பட வேண்டும் என்று தகவல் ஆணையர்கள், அதிகாரிகள், தகவல் ஆர்வலர்கள் உள்ளிட்டோரை அவர் வலியுறுத்தினார்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உலக கராத்தே போட்டி: விழுப்புரத்திலிருந்து மூவா் பங்கேற்பு

தஞ்சை அருகே சோழர் கால நந்தி, விஷ்ணு சிற்பங்கள் கண்டெடுப்பு

தி‌ல்லி கலா‌ல் ஊழ‌ல் வழ‌க்கு: அர​வி‌ந்‌த் கேஜ‌​ரி​வா​லுக்கு நீதிமன்றக் காவ‌ல் நீ‌ட்டி‌ப்பு

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

SCROLL FOR NEXT