இந்தியா

மக்களவைத் தேர்தலில் பாஜக-சிவசேனை கூட்டணி அமைக்க வாய்ப்பு

தினமணி

"அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் பாஜகவும், சிவசேனையும் கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளது; அதேநேரம், மகாராஷ்டிர சட்டப் பேரவைத் தேர்தலுக்கு இரு கட்சிகளும் கூட்டணி அமைக்க வாய்ப்பில்லை' என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் தெரிவித்தார்.
 இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் வெள்ளிக்கிழமை இரவு கூறியதாவது:
 நாடு முழுவதும் ஒரே நேரத்தில் சட்டப் பேரவைகளுக்கும், மக்களவைக்கும் தேர்தல் என்பது சாத்தியமா? என்று தெரியவில்லை. இப்போது நிலைமை மாறிவிட்டது. அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தலில் சிவசேனையும், பாஜகவும் கூட்டணி அமைத்து போட்டியிட வாய்ப்புள்ளது. ஆனால், மாநிலத் தேர்தலை பொறுத்தவரை இரு கட்சிகளும் கூட்டணி அமைத்து போட்டியிட வாய்ப்பில்லை என்றார் அவர்.
 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களின் நம்பகத்தன்மை குறித்து அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
 அதற்கு, "இந்த விவகாரம் தொடர்பாக அடுத்த 15 தினங்களுக்குள் ஆலோசிக்க வேண்டும். மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களுக்கு பதிலாக பழையபடி வாக்குச்சீட்டு பதிவு முறையை கொண்டுவர வேண்டும் என்று விரும்புகிறேன்' என்று பவார் பதிலளித்தார்.
 ரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரம் குறித்து அவர் கூறுகையில், "ரஃபேல் ஒப்பந்தத்தில் ஊழல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். போஃபர்ஸ் ஊழல் புகார் குறித்து நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று 1980 காலகட்டத்தில் அப்போது எதிர்க்கட்சியாக இருந்த பாஜக வலியுறுத்தியிருந்தது. அந்தக் கோரிக்கை அப்போது நிறைவேற்றப்பட்டது. அதேபோல், ரஃபேல் விவகாரம் குறித்தும் நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்' என்றார்.
 பாஜக, சிவசேனை மகாராஷ்டிரத்திலும், மத்திய அரசிலும் தற்போது கூட்டணியில் தான் உள்ளது. இருப்பினும், இரு கட்சிகளிடையே பல்வேறு விவகாரங்களில் ஒற்றுமை காணப்படவில்லை. இதனால், எதிர்வரும் தேர்தலில் கூட்டணி தொடருமா? என்று சந்தேகம் எழுந்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தண்ணீா் பந்தல் திறப்பு

தண்ணீா் பந்தல் திறப்பு...

பிப்டிக் இடத்தில் கட்டியதாக புதுச்சேரி பாஜக பிரமுகா் வீடு இடிப்பு

புதுச்சேரியில் கூரியா் அலுவலகங்களில் போதை தடுப்பு பிரிவு போலீஸாா் சோதனை

காரில் மதுப்புட்டிகள் கடத்தல்: இருவா் கைது

SCROLL FOR NEXT